கம்பராமாயணம் 7949 · யுத்த 17.178
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேர் மேல் செலக் குதித்தான் - (அனுமன் அந்தத் திரிசிரன் உடைய) தேரின் மேல் சென்று சேரும்படி குதித்து; கார் மேல் துயில் மலை போலியை திரிசிரத்தனை - மேகம் மேல் படியப் பெற்ற மலையைப் போன்றவன் ஆன அந்தத் திரிசிரனை; ஓர் திறத்தால் கரத்தால் பிடித்து எடுத்தான் - ஒப்பற்ற வலிமையால் கையால் பிடித்து எடுத்து; பார் மேல் படுத்து அரைத்து - பூமியின் மீது தள்ளி அரைத்து; அவன் பழி மேல் படப் படுத்தான் - அவனுக்குப் பழி மிகுதியாக உண்டாகுமாறு கொன்றான்; போர் மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் - (அதற்குப் பிறகு) போர் மேற்குத் திசை வாயிலில் உள்ளது என்று அங்குப் போனான்.
இலக்குவன் இருந்த வட திசை வாயிலில் திரிசிரத்தனை அழித்த அனுமன் போர் செய்ய மேற்குத் திசை வாயிலுக்குச் சென்றனன் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He leapt so as to land upon the chariot, and by a feat of strength
- seized with his hand Tiriciraṉ, who was like a mountain with clouds sleeping on it, and lifted him;
- he threw him on the earth and ground him, and killed him so that disgrace fell upon him;
- then, saying, 'The fighting is at the great western gate,' he went off.
What the poem says
Aṉumāṉ jumps onto Tiriciraṉ's chariot, grabs the huge demon, who looks like a mountain capped with resting clouds, hurls him to the ground and grinds him to death, a shameful end for a warrior.
Having finished at the northern gate where Ilakkuvaṉ is fighting, Aṉumāṉ leaves to join the battle at the western gate of Ilaṅkai.