கம்பராமாயணம் 7950 · யுத்த 17.179

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இமையிடை ஆகச் சென்றான்; இகல் அதிகாயன் நின்றான்,
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான், அருவியோடு அழல் கால் கண்ணான்,
‘உமையொறு பாகனேயும், இவன் முனிந்து உருத்த போது,
கமையிலன் ஆற்றல் ‘என்னா, கதத்தொடும் குலைக்கும் கையான்.

பொருள் · Meaning in Tamil

இமையிடையாகச் சென்றான் - (நடுவில் புகுந்து நடந்தவனாகிய அனுமன்) கண்ணிமை காலத்துக்கு முன்பே (மேற்குத் திசை வாயிலுக்குச்) சென்று விட்டான்; இகல் அதிகாயன் அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் - வலிமை மிகு அதிகாயன் தக்கதொரு செயலைச் செய்வதற்கு அறியாமல், அருவியொடு அழல் கால் கண்ணான் நின்றான் - நீர் அருவியோடு நெருப்பையும் வெளிப் படுத்துகின்ற கண்களை உடையவனாகித் (திகைத்து) நின்றவனாகி; உமையொரு பாகனேயும் இவன் முனிந்து உருத்த போது கமையிலன் ஆற்றல் என்னா - உமை அம்மையை இடப்பாகத்திலே கொண்ட சிவபிரானும் இந்த அனுமன் சினம் கொண்டு சீற்றத்தை வெளியிடும் போது பொறுத்தற்கு வல்லமை உடையவன் அல்லன் என்று கூறி; கதத்தொடும் குலைக்கும் கையான் - சினத்துடன் நடுங்குகின்ற கையை உடையவன் ஆனான்.

இமை இடையாக - கண்ணிமைப் பொழுதில், காலுதல் - வெளிப்படுத்தல், கமையிலன் - பொறுத்தற்கு இலன், கதம் - சினம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He was gone in the blink of an eye; hostile Atikāyaṉ stood there,
  2. unable to decide what fitting deed to do, his eyes pouring streams and fire;
  3. saying, 'Even he who has Umai as half his body has not the strength
  4. to withstand this one when he is angered and enraged,' he stood with hands trembling in fury.

What the poem says

The metre changes to a longer six-foot line. Aṉumāṉ disappears in an instant, leaving Atikāyaṉ baffled and helpless, his eyes streaming tears and flashing fire. He admits to himself that even Civaṉ, who shares his body with the goddess Umai, could not stand against Aṉumāṉ's wrath, and his hands shake with rage.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1imaiyiṭaiyākac ceṉṟāṉ; ikal atikāyaṉ niṉṟāṉ,
amaivatu oṉṟu āṟṟal tēṟṟāṉ, aruviyōṭu aḻalkāl kaṇṇāṉ,
‘umaiyoṟupākaṉēyum, ivaṉ muṉintu urutta pōtu,
kamaiyilaṉ āṟṟal ‘eṉṉā, katattoṭum kulaikkum kaiyāṉ.