கம்பராமாயணம் 7951 · யுத்த 17.180
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூணிப்பு ஒன்று உடையன் ஆகிப் புகுந்த நான் - (இலக்குவனை அழிப்பது என்ற) குறிக்கோள் ஒன்றினைக் கைக் கொண்டவனாகிப் (போர்க்களத்துப்) புகுந்த நான்; புறத்து நின்று பாணித்தல் வீரம் அன்றால் - பிறிதொரு எண்ணம் கொண்டு நின்று காலத்தை நீட்டித்தல் வீரம் அல்ல; தூணிப் பொன் புறத்தான் - அம்பு அறாத்தூணியை அழகிய முதுகில் கட்டியுள்ளவனும்; பரு வலி படைத்தோர்க்கு எல்லாம் ஆணிப் பொன் ஆனான் தன்னை - மிக்க வலிமை படைத்தவர்களுக்கெல்லாம் ஆணிப் பொன் போல் சிறந்தவனும் ஆகிய இலக்குவன் தன்னைப்; பின்னும் கண்டு அறிவென் என்னா - மேலும் கண்டு அறிவேன் என்று கூறி; திண்தேர் இளவல் மேல் தூண்டச் சொன்னான் - தனது வலிய தேரை இலக்குவனை நோக்கிச் செலுத்துமாறு (தேர்ப்பாகனிடம் அதிகாயன்) சொன்னான்.
பூணிப்பு - குறிக்கோள், மேற்கோள் தீர்மானம். பாணித்தல் - காலம் தாழ்த்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "I came in bound by a single vow; to stand aside
- and waste time is not valour; I will go and see again
- him who is the touchstone gold among all who possess great strength,"
- he said, he with the golden quiver on his back, and ordered the strong chariot driven at the younger one.
What the poem says
Atikāyaṉ pulls himself together. He entered the battle with one purpose, to kill Ilakkuvaṉ, and it would be unworthy of a warrior to dally elsewhere. With his golden quiver on his back, he orders his charioteer to drive straight at Ilakkuvaṉ, whom he grudgingly calls the purest gold among the mighty, the gold against which others are tested.