கம்பராமாயணம் 7952 · யுத்த 17.181

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேர் ஒலி கடலைச் சீற, சிலை ஒலி மழையைச் சீற,
போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்துப் போக,
தார் ஒலி கழற்கால் மைந்தன், தானையும் தானும் சென்றான்;
வீரனும் எதிரே நின்றான், விண்ணவர் விசயம் சொல்ல.

பொருள் · Meaning in Tamil

தேர் ஒலி கடலைச் சீற - தேர்களின் ஒலி கடலைச் சீறுவது போல் மிகவும்; சிலை ஒலி மழையைச் சீற - வில்களின் ஒலி மழை ஒலியைச் சீறுவது போல் மிகவும்; போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்துப் போக - போர்க்களத்தில் ஒலிக்கின்ற முரசின் ஒலி திக்குகள் கடந்து வெளியில் செல்லவும்; தார் ஒலி கழற்கால் மைந்தன் - போர் மாலை தழைத்த (மார்பினையும்) வீரக்கழல் அணிந்த காலினையும் உடைய அதிகாயன்; சேனையும் தானும் சென்றான் - படைகளும் தானும் ஆகச் சென்றான்; விண்ணவர் விசையம் வேண்ட - தேவர்கள் (வெல்க வெல்க என) வெற்றியே விரும்ப; வீரனும் எதிரே நின்றான் - வீரனாகிய இலக்குவனும் (அவன்) எதிரே (போரிட) நின்றான்.

இலக்குவனும் அதிகாயனும் போரிட எதிரெதிர் நின்றனர் என்க. சிலை - வில், ஓதை - ஓசை, தார் ஒலி - மாலை தழைத்த, ஒலித்தல் ஈண்டுத் தழைத்தல், விசையம் - வெற்றி, வேண்ட - விரும்ப.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the roar of chariots challenging the sea, the twang of bows challenging the rain clouds,
  2. and the boom of the battle drums going out beyond the quarters,
  3. the young warrior with lush garland and anklets on his feet advanced, he and his army;
  4. and the hero stood facing him, while the gods prayed for his victory.

What the poem says

Atikāyaṉ advances with his army. His chariots thunder louder than the sea, his archers' bows louder than the storm, and his drums can be heard beyond the horizons. Ilakkuvaṉ stands his ground to meet him, while the gods in heaven pray for his victory. The two champions are now face to face.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēr oli kaṭalaic cīṟa, cilai oli maḻaiyaic cīṟa,
pōr oli muraciṉ ōtai ticaikaḷiṉ puṟattup pōka,
tār oli kaḻaṟ kāl maintaṉ, tāṉaiyum tāṉum ceṉṟāṉ;
vīraṉum etirē niṉṟāṉ, viṇṇavar vicayam vēṇṭa.