கம்பராமாயணம் 7955 · யுத்த 17.184
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உவரி நீரை தீ எழக் கலக்கினான் சிறுவன் - பாற்கடல் நீரைத் தீ வெளிப்படும்படி கலக்கியவனாகிய வாலியின் மகனான அங்கதன்; ஆயிரம் புரவி பூண்ட அதிர்குரல் அசனித் திண்தேர் - ஆயிரம் குதிரைகள் பூட்டியதும் ஒலிக்கும் இடியைப் போன்றதுமாகிய (அதிகாயனது) வலிய தேர்; போயின திசைகள் எங்கும் - சென்ற திசைகள் எல்லாவற்றிலும்; கறங்கு எனச் சாரி போமால் - (அங்கதன் தானும்) காற்றாடி போல சுற்றிப் போவான்; மீ எழின் உயரும் - (தேர்) மேல் எழுந்தால் (தானும்) மேலெழுவான்; தாழின் தாழும் - (தேர்) கீழே தாழ்ந்தால் (தானும்) தாழ்வான்; விண் செல்லின் செல்லும் - தேர் ஆகாயத்தில் சென்றது என்றால் (தானும்) ஆகாயத்தில் செல்லுவான்.
அதிகாயனுடைய வலிய தேருக்கு ஒப்பாக அங்கதனும் திரிந்தனன் என்க. அசனி - இடி, கறங்கு - காற்றாடி, மீ - மேலே. உவரி - கடல். ஆல் - அசை. அம்ம - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Wherever the strong chariot went, yoked to a thousand horses, thundering with a roar like a thunderbolt,
- in every direction, he would wheel round it like a whirligig;
- if it rose, he rose; if it sank, he sank; if it went into the sky, he went too;
- he, the son of the one who churned the ocean's water till fire rose up!
What the poem says
Atikāyaṉ's chariot, drawn by a thousand horses and roaring like thunder, darts everywhere, even up into the sky. Aṅkataṉ, carrying Ilakkuvaṉ, matches every move, spinning around it like a whirligig, rising, dropping and flying with it.
He is called the son of the one who churned the ocean, since his father Vālī was said to have helped churn the sea of milk so fiercely that fire leapt from it.