கம்பராமாயணம் 7956 · யுத்த 17.185
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அத்தொழில் நோக்கி - (அங்கதனது) அந்தத் தொழிலைப் பார்த்து; அங்கு வானரத் தலைவர் ஆர்த்தார் - அப்போது வானரத் தலைவர் மகிழ்ச்சிப் பேரொலி செய்தனர்; இமையோர் எல்லாம் - தேவர்கள் எல்லாம்; இத்தொழில் கலுழற்கேயும் அரிது என - இவ் (அங்கதனது) தொழில் திறமை கருடாழ்வானுக்குக் கூட இயலாது என்று சொல்லி; கைத்தலம் குலைத்தார் ஆக - கைகள் விதிர் விதிர்த்தார் ஆக; இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி - இளைய வீரனுடைய அம்புகள் என்னும் தாரையாகப் பொழிகிற மழை; களிற்றினும் புரவி மேலும் தைத்தன - (அரக்கரின்) யானைகள் மீதும் குதிரைகள் மீதும் தைத்தன.
குலைத்தல் - விதிர் விதிர்த்தல், நடுங்குதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing that feat, the monkey chiefs there shouted;
- all the gods, saying, 'This feat would be hard even for Kaluḻaṉ,'
- shook their hands in wonder; and on the elephants and on the horses
- the torrent of rain that was the young hero's arrows struck home.
What the poem says
The monkey leaders cheer Aṅkataṉ's agility, and the gods tremble with amazement, saying that even Kaluḻaṉ, the divine eagle, could not do as well. Meanwhile, from his place on Aṅkataṉ's shoulders, Ilakkuvaṉ pours a stream of arrows into the demon elephants and horses.