கம்பராமாயணம் 7957 · யுத்த 17.186
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முரசம் முழங்கின - முரசங்கள் முழங்கின; வேழம் முழங்கின - யானைகள் முழங்கின; மூரித் திண்தேர் முழங்கின - மிக்க வலிமை உடைய தேர்கள் முழங்கின; முகரப் பாய்மா முழங்கின - கனைக்கும் பண்புள்ள குதிரைகள் முழங்கின; முழு வெண் சங்கம் முழங்கின - முழுதும் வெண்மையான சங்குகள் முழங்கின; தனுவின் ஓதை முழங்கின - வில்லின் ஓசை முழங்கின; கழலும் தாரும் முழங்கின - வீரக் கழலும் மாலைகளும் முழங்கின; தெழிப்பும் ஆர்ப்பும் முகிலின் மும்மை முழங்கின - (வீரர்களின்) அதட்டலும் ஒலிப்பும் மேக ஒலியினும் மும்மடங்கு முழங்கின.
போர்க்கள ஒலிகள் இப்பாடலில் கூறப்படுகின்றன. முகரம் - கனைத்தல், தார் என்பதனைக் கிண்கிணி என்பாரும் உளர். சொற்பொருட் பின்வருநிலையணி காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The drums roared; the elephants roared; the mighty strong chariots
- roared; the neighing, galloping horses roared; the pure white conches
- roared; the sound of the bows roared; the anklets and the bells
- roared; the shouts and battle cries roared, three times louder than the clouds.
What the poem says
A verse made of sound: every line repeats the verb "roared" as the poet lists the noises of battle, drums, elephants, chariots, neighing horses, conches, bows, the jingling of anklets and garland bells, and the warriors' threats and war cries, together three times louder than thunder. Repeating one word in the same sense through a verse is a recognised figure in Tamil poetics.