கம்பராமாயணம் 7958 · யுத்த 17.187
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கரி பட - அப்போர்க்களத்தில் யானைகள் இறந்து படவும்; காலாள் வெள்ளம் களம் பட - காலாட் படையின் கூட்டம் போர்க் களத்தில் அழிந்து படவும்; கலினக் காலப் பரிபட - சேணம் பூட்டிய காற்றைப் போல் செல்லும் குதிரைகள் அழிந்து படவும்; கண்ட கூற்றும் பயம்பட - (போர்க்கள அழிவினைக்) கண்ட யமனும் அச்சம் மேம்படவும்; பைம்பொன் திண்தேர் எரிபட - பசும் பொன்னால் செய்யப்பட்ட வலிய தேர்கள் எரிந்து படவும்; பொருத பூமி இடம் பட - போர்க்களம் படைகள் இறந்து போனதால் இடம் அகன்று தோன்றவும்; எதிர்ந்த எல்லாம் முரி பட - எதிர்த்து வந்த படைகள் எல்லாம் அழிந்து படவும்; வீரன் முரண்கணை மூரி மாரி - வீரனாகிய இலக்குவன் உடைய வலிமையான அம்புகளால் ஆகிய பெருமழை; பட்ட - மிகுதியாகத் தோன்றியது.
கலினம் - சேணம். இடம்பட - வெற்றிடமாகத் தோன்ற, சொற் பொருள் பின்வருநிலையணி காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the elephants fell, the floods of foot soldiers fell on the field, the horses
- bridled and swift as wind fell, Death himself who saw it fell into fear, the strong chariots of fine gold
- fell into flames, the battle ground fell open into empty space, and all that opposed
- fell broken, the hero's great rain of mighty arrows fell.
What the poem says
Another verse built on one repeated word, paṭa, "to fall, to come to be". Ilakkuvaṉ's mighty rain of arrows makes elephants, foot soldiers and wind-swift horses fall; Death himself is seized by fear; the golden chariots burst into flame; and the battlefield is cleared, leaving open ground where armies stood.