கம்பராமாயணம் 7959 · யுத்த 17.188
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மன்னவன் தம்பி - இராமபிரான் தம்பியாகிய இலக்குவன்; மற்று அவ் இராவணன் மகனை நோக்கி - அந்த இராவணன் மகனாகிய அதிகாயனை நோக்கி; உனக்கு என் இச்சை - உனக்கு என்ன விருப்பம்; நின்ற எறிபடைச் சேனை எல்லாம் - (போர்க்களத்து) நின்ற எறிதற்குரிய படைக்கலங்களைக் கொண்டுள்ள சேனை முழுவதும்; சின்ன பின்னங்கள் பட்டால் பொருதியோ - சின்ன பின்னமாய்ச் சிதறி அழிந்த (பிறகு) போர் செய்வாயோ? திரிந்து நீயே நல் நெடுஞ் செருச் செய்வாயோ - பிரிந்து நீ மட்டும் நல்ல நெடிய போரினை (இப்போதே) செய்வாயோ? நயந்தது சொல்லுதி என்றான் - (நீ) விரும்பியதைச் சொல்லுவாயாக என்றான்.
மற்று - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The king's brother looked at that son of Irāvaṇaṉ
- and said, "What is your wish? Will you fight after all
- this army with its hurling weapons that stands here has been cut to pieces? Or will you break away
- and wage a fine, long battle yourself? Tell me what you prefer."
What the poem says
Ilakkuvaṉ, the brother of King Irāmaṉ, speaks to Atikāyaṉ with courtly confidence. He offers him a choice: will Atikāyaṉ wait until his whole army has been hacked to pieces before he fights, or will he step out now and meet Ilakkuvaṉ in single combat?