கம்பராமாயணம் 7960 · யுத்த 17.189

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘யாவரும் பொருவர் அல்லர், எதிர்ந்துள யானும் நீயும்,
தேவரும் பிறரும் காண, செய்வது, செய்வது எல்லாம்;
காவல் வந்து உன்னைக் காப்பார் காக்கவும் அமையும்; வேறே
கூவியது அதனுக்கு அன்றோ? ‘ என்றனன் கூற்றின் வெய்யோன்.

பொருள் · Meaning in Tamil

கூற்றின் வெய்யோன் - யமனைக் காட்டிலும் கொடியவன் ஆகிய அதிகாயன்; யாவரும் பொருவர் அல்லர் - எல்லோரும் போரிடுவார் அல்லர்; தேவரும் பிறரும் காண - (குழுமியுள்ள) தேவர்களும் மற்றவர்களும் காணும்படி; செருவது செய்வ எல்லாம் - போரது செய்யப் போவதெல்லாம்; எதிர்ந்துள யானும் நீயும் - (போருக்காக) எதிர்க்கப்பட்டுள்ள யானும் நீயுமே ஆகும்; உன்னைக் காவல் வந்து காப்பார் காக்கவும் அமையும் - உனக்குக் காவலாக வந்து காப்பவர் காப்பதும் பொருந்தும்; (உன்னை யார் வந்து காத்தாலும் சரியே என்றபடி) வேறே கூவியது அதனுக்கு அன்றோ என்றனன் - (உனக்கு ஆள் அனுப்பி) தனியாகப் போருக்கு அழைத்தது தனியாகப் போரிட்டு வெல்வதற்காக அல்லவா? என்று கூறினான்.

செருவது - அது பகுதிப் பொருள் விகுதி. வேறே கூவுதல் - தனித்து நின்று போர் செய்வதற்கு அறை கூவி அழைத்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Not everyone will fight; you and I, who face each other,
  2. will do all the fighting there is, while the gods and the rest look on;
  3. and let those who come to guard you guard you if they will;
  4. was it not for this that I called you out alone?" said he, more cruel than Death.

What the poem says

Atikāyaṉ, crueller than Death himself, accepts the single combat. The armies need not fight: the battle will be between the two of them, with gods and others watching. Anyone who wishes may come to protect Ilakkuvaṉ; it makes no difference. That, he says, is exactly why he challenged Ilakkuvaṉ to fight alone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘yāvarum poruvar allar, etirntuḷa yāṉum nīyum,
tēvarum piṟarum kāṇa, ceruvatu ceyva ellām;
kāval vantu uṉṉaik kāppār kākkavum amaiyum; vēṟē
kūviyatu ataṉukku aṉṟō? ‘ eṉṟaṉaṉ kūṟṟiṉ veyyōṉ.