கம்பராமாயணம் 7961 · யுத்த 17.190
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உமையனே காக்க - உன் அண்ணனாகிய இராமனே காக்கட்டும்; மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க - அன்றி அங்கு உமையம்மையை இடப்பாகத்தில் கொண்ட சிவபிரானே (வந்து) காக்கட்டும்; இமையவர் எல்லாம் காக்க - தேவர்கள் எல்லாம் (சேர்ந்து வந்து) காக்கட்டும்; உலகம் ஓர் ஏழும் காக்க - உலகம் ஓர் ஏழில் வாழும் (அனைவரும் வந்து) காக்கட்டும்; இன்றோடு உன் வாழ்க்கை சமையும் - இன்றுடன் உன் வாழ்வு முடிந்து விடும்; என்று தன் சங்கம் ஊதி - என்று கூறித் தன் சங்கினை எடுத்து ஊதி; அமை உருக் கொண்ட கூற்றை - மூங்கில் உருவம் கொண்ட யமனை (தன் வில்லினை); நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் - நாணினைத் தெறித்து இடி போல் பேரொலி செய்தான்.
உமையன் - உம் தமையனாகிய இராமன், சமைதல் - முடிதல், அமை - மூங்கில்; ஆடமை என்றார் பிறரும். அங்கு - அசையுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Let your elder brother guard you; let him who has Umai as half his body guard you;
- let all the gods guard you; let the seven worlds guard you;
- your life ends today," he said, and blew his conch,
- twanged the string of Death that had taken the form of bamboo, and roared like thunder.
What the poem says
Atikāyaṉ boasts that no one can save Ilakkuvaṉ, not his elder brother Irāmaṉ, not Civaṉ who shares his body with Umai, not all the gods, not the inhabitants of all seven worlds. Ilakkuvaṉ's life ends today.
He blows his conch and plucks his bowstring with a thunderous sound. His bow, made of bamboo, is called Death in the shape of a bamboo stave.