கம்பராமாயணம் 7962 · யுத்த 17.191

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னது கேட்ட மைந்தன் - அச்சொற்களைக் கேட்ட வீரனாகிய இலக்குவன்; அரும்பு இயல் முறுவல் தோன்ற - முல்லை அரும்பினை ஒத்த பற்கள் தெரியப் புன்னகைத்து; நீ சொன்னவர் வாரார் - (நீ) சொன்னவர்கள் யாரும் வரமாட்டார்கள்; யானே தோற்கினும் தோற்கத்தக்கேன் - (ஒருவேளை) நானே தோற்கத் தக்கவன்; என்னை நீ பொருது வெல்லின் - என்னை நீ போரிட்டு வென்றால்; அவரையும் வென்றி என்னா - அவர்களை எல்லாம் வென்றவன் ஆவாய் என்று கூறி; மின்னினும் மிளிர்வது - மின்னலைக் காட்டிலும் ஒளி விடுவதாகிய; வெஞ்சரம் ஆங்கோர் கோத்து விட்டான் - கொடிய அம்பினை அப்போது (வில்லில்) கோத்து அதிகாயன் மீது செலுத்தினான்.

முறுவல் எள்ளல் பற்றி வந்தது என்க. அவரையும் என்றது முன் பாடலில் கூறிய உமையன் முதலினோரை என்க. ஆங்கு - அவ்விடத்து. ஓர் - ஒரு எனப் பொருளுரைத்துக் காட்டுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hearing that, the young hero, with a smile like a jasmine bud showing,
  2. said, "Those you named will not come; it is I who must lose, if anyone loses;
  3. if you fight me and win, you will have conquered them too,"
  4. and he fitted a fierce arrow brighter than lightning and let it fly.

What the poem says

Ilakkuvaṉ answers with a scornful smile that shows teeth white as jasmine buds. None of the protectors Atikāyaṉ named will come; if anyone is to lose, it will be Ilakkuvaṉ himself. And if Atikāyaṉ can beat him, he will have beaten all of them. With that he fits an arrow brighter than lightning and shoots.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉatu kēṭṭa maintaṉ, arumpu iyal muṟuval tōṉṟa,
‘coṉṉavar vārār; yāṉē tōṟkiṉum tōṟkat takkēṉ;
eṉṉai nī porutu velliṉ, avaraiyum veṉṟi ‘eṉṉā,
miṉṉiṉum miḷirvatu āṅku ōr veñ caram kōttu viṭṭāṉ.