கம்பராமாயணம் 7963 · யுத்த 17.192
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வெற்பினை வெதுப்பும் தோளான் - மலையினையும் வெப்ப வலிமையால் அழிக்கவல்ல தோள்களை உடைய அதிகாயன்; விட்ட வெம் பகழி தன்னை - (இலக்குவன்) விட்ட கொடுமையான அம்பினை; விசும்பிடை சுட்ட ஓர் பகழி தன்னால் துணித்து நீக்கி - ஆகாயத்தின் கண் சுடும் தன்மையுள்ள ஒப்பற்ற (தன்) அம்பு ஒன்றினால் துண்டாக்கி நீக்கி; இலக்குவ - இலக்குவனே; விலக்காய் என்னா - (இவ்வம்புகளை) விலக்குவாய் என்று கூறி; திட்டியின் விடத்து நாகம் அனையன - திட்டி விடம் என்னும் நாகத்தை ஒத்தனவாகிய; வாளி எட்டினோடு எட்டு - அம்புகள் பதினாறினைச்; சிந்தி ஆர்த்தான் - (இலக்குவன் மீது) எய்து பேரொலி செய்தான்.
இலக்குவன் செலுத்திய அம்பினை விண்ணில் அழித்த அதிகாயன் அவன் மீது பதினாறு அம்புகளை எய்து “இதை நீ தடுத்து விலக்குக” என்று கூறிப் பேரொலி செய்தான். திட்டி விடம் - கண்ணில் நஞ்சு கொண்ட ஒரு நாக சாதி. “திட்டியின் விட மன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ” (கம்ப. 7351) என்று சீதையைக் குறித்துக் கும்பகருணன் கூறும் பகுதி இங்கு எண்ணத் தக்கது. வெதுப்பும் - செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம். இலக்குவ - அண்மை விளி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fierce arrow that was loosed, he whose arms could scorch a mountain
- cut apart and cast aside in mid-sky with one burning arrow,
- and, saying, 'Ilakkuva, ward these off,' he scattered eight and eight arrows,
- like serpents whose glance is poison, and roared.
What the poem says
Atikāyaṉ, whose arms could melt a mountain, shoots down Ilakkuvaṉ's arrow in mid-air with a single fiery shaft. Then he looses sixteen arrows at him, taunting, "Stop these if you can, Ilakkuvaṉ!"
The arrows are compared to the tiṭṭi-viṭam, a kind of serpent believed to kill with a poisonous glance; Kumpakaruṇaṉ earlier used the same image for Cītai's chastity.