கம்பராமாயணம் 7964 · யுத்த 17.193

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவன் ஆர்த்து எய்த வாளி அனைத்தையும் - அந்த அதிகாயன் பேரொலி செய்து எய்த அம்புகள் அனைத்தையும்; இராமன் தம்பி அறுத்து மாற்றி - இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவன் துண்டித்துப் போக்கி; வேர்த்து மேருவைப் பிளக்கற் பால - சினம் கொண்டு மேரு மலையினையும் பிளக்கும் வல்லமை உடையவனாகிய; ஒலி வயிர வெங்கோல் தூர்த்தனன் - ஒலிக்கும் திண்மையான கொடிய அம்புகளை நிரப்பினான்; குபேரனை ஆடல் கொண்டான் - குபேரனை வெற்றி கொண்டவன் ஆகிய அதிகாயன்; அவை எலாம் துணித்துச் சிந்தி - அந்த அம்புகள் எல்லாவற்றையும் துண்டமாக்கித் தள்ளி; கூர்த்தன பகழி கோத்தான் - கூர்மை உடையனவாகிய அம்புகளை (வில்லில்) கோத்து எய்தான்.

வேர்த்து - சினந்து, வயிர வெங்கோல் - திண்ணிய கொடிய அம்பு, ஆடல் - வெற்றி. “கூற்றையும் ஆடல் கொண்டேன்” என்ற (கம்ப. 7431) கும்பகருணன் கூற்றில் ஆடல் அப்பொருட்டாதல் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Cutting down and turning aside all the arrows the other shot with a roar,
  2. Irāmaṉ's brother, in anger, filled the air with whistling, hard, cruel shafts
  3. able to split Mount Mēru; and he who had conquered Kupēraṉ
  4. cut them all to pieces and scattered them, and fitted sharp arrows.

What the poem says

The duel is evenly matched. Ilakkuvaṉ destroys all sixteen arrows and, in anger, fills the sky with whistling diamond-hard shafts strong enough to split Mount Mēru. Atikāyaṉ, who once defeated Kupēraṉ, the god of wealth, cuts down every one of them and nocks more sharp arrows of his own.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārttu avaṉ eyta vāḷi aṉaittaiyum aṟuttu māṟṟi
vērttu, oli vayira veṅ kōl, mēruvaip piḷakkaṟpāla,
tūrttaṉaṉ, irāmaṉ tampi; avai elām tuṇittuc cinti,
kūrttaṉa pakaḻi kōttāṉ kupēraṉai āṭal koṇṭāṉ.