கம்பராமாயணம் 7965 · யுத்த 17.194
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குரிசில் - ஆடவர் திலகனாகிய இலக்குவன்; எய்தவன் எய்த எல்லாம் - எய்தவன் ஆகிய (அதிகாயன்) எய்த எல்லா அம்புகளையும்; எரி முகப் பகழியாலே கொய்தனன் அகற்றி - நெருப்பை முகத்தில் கொண்ட அம்பால் அறுத்து அகற்றி; ஆர்க்கும் அரக்கனை - பேரொலி செய்யும் அரக்கனாகிய அதிகாயனை; கோபம் செய்தனன் - சினந்தவன் ஆகி; தெய்வச் செயல் அன்ன கணையைத் துரந்தான் - (தவறாது பயன் விளைக்கும்) தெய்வச்செயலை ஒத்த அம்புகளைச் செலுத்தினான்; பிழைப்பு இலாத வெங்கோல் - (இலக்குத்) தவறாத அந்தக் கொடிய அம்புகள் எல்லாம்; அவன் கவசம் நொய்து கீறி நுழைவன - அந்த அதிகாயனுடைய கவசத்தை எளிமையாகப் பிளந்து நுழைவன வாயின.
தெய்வச் செயல் அன்ன கணை - செய்த வினைக்கு ஏற்பப் பயன் விளைக்கும் தவறாத தெய்வச் செயலை ஒத்த அம்புகள், இது பயன் உவமை என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All that he shot, the prince cut off and turned aside
- with fire-headed arrows; then, angered, he loosed at the roaring demon
- arrows like the working of fate; and those cruel shafts,
- never missing, easily tore through his armour and went in.
What the poem says
Ilakkuvaṉ cuts down every arrow Atikāyaṉ shoots with fire-tipped shafts of his own. Then, angered, he lets fly arrows that are as unerring as fate, which always delivers the fruit of one's deeds. They slice easily through Atikāyaṉ's armour and pierce his body.