கம்பராமாயணம் 7967 · யுத்த 17.196
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இடை நின்ற மயக்கம் தீர்த்தான் - இடையே தோன்றிய மயக்கம் நீங்கியவனாகிய அதிகாயன்; புடை நின்றார் புரண்ட வாறும் - (தன்) பக்கத்தில் நின்றவர்கள் (உயிர் ஒழிந்து) புரண்ட தன்மையினையும்; போகின்ற புங்கவாளி - (தன்னைச் சுற்றிப் போகின்ற இலக்குவனுடைய) கூர்மையான அம்புகள்; கடை நின்று கணிக்க - முழுதும் நின்று கணக்கிட; அங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான் - அங்கு ஒரு கணக்கு இல்லாத தன்மையில் மிகுதியாகச் செல்வதையும் கண்டவனாகி; காந்தி ஏந்திய சிலையன் - கொதித்து ஏந்திய வில்லை உடையவனாய்; தொடை நின்ற பகழி மாரி - தொடுக்கப் பெற்ற அம்பு மழையை; மாரியின் மும்மை தூர்த்தான் - மழையினும் மூன்று மடங்கு செலுத்தி மிகுதியாக நிரப்பினான்.
புடை - பக்கம், புங்கம் - கூர்மை, காந்தி - சினந்து. பகழி மாரி - உருவகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He saw how those beside him had rolled over dead, and how the sharp arrows
- flying past were beyond all counting, even if one stood to the end to count them;
- he shook off the faintness that had come over him; blazing, with his bow raised,
- he poured a rain of nocked arrows three times thicker than rain.
What the poem says
Atikāyaṉ comes to himself and sees his soldiers lying dead all around, and the numberless arrows still flying from Ilakkuvaṉ's bow. Shaking off his weakness, he raises his bow in fury and fires back a storm of arrows three times denser than a monsoon downpour.