கம்பராமாயணம் 7968 · யுத்த 17.197
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெகுளி மிக்கோன் - சினம் மிக்கவனாகிய அதிகாயன்; வான் எலாம் பகழி - ஆகாயம் எல்லாம் அம்புகள்; வானின் வரம்பு எலாம் பகழி - ஆகாய எல்லை எல்லாம் அம்புகள்; மண்ணும் தான் எலாம் பகழி - நிலவுலகம் எல்லாம் அம்புகள்; குன்றின் தலை எலாம் பகழி - மலை உச்சிகளில் எல்லாம் அம்புகள்; சார்ந்தோர் ஊன் எலாம் பகழி - (அதிகாயனைச்) சார்ந்திருப்பவர் உடம்பு எல்லாம் அம்புகள்; நின்றோர் உயிர் எலாம் பகழி - எதிர்த்து நின்றவர்களுடைய உயிர்களில் எல்லாம் அம்புகள்; வேலை மீன் எலாம் பகழி - கடலில் உள்ள மீன்கள் மேல் எல்லாம் அம்புகள்; ஆக வித்தினன் - (என) ஆகுமாறு (எல்லா இடத்தும்) அம்புகளை விதைத்திட்டான்.
அதிகாயன் உடலுடைப் பொருள் மற்றும் நுண்பொருள் ஆகியவற்றின் மீது அம்புகளைச் செலுத்தினான் என்க. தலை - உச்சி. சொற் பொருட் பின்வரு நிலையணி. உருவம் மற்றும் அருவப் பொருள்களைப் பகழி சேர்ந்ததாகக் கூறியது உயர்வு நவிற்சி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the sky was arrows, all the bounds of the sky were arrows, the earth
- itself was all arrows, all the hilltops were arrows, all the flesh
- of those near by was arrows, all the bodies of those who stood were arrows, all the fish
- of the sea were arrows: so he sowed them, he of the towering rage.
What the poem says
Another verse built on a refrain: "all … arrows". Atikāyaṉ sows arrows everywhere, filling the sky and its farthest edges, the earth, the mountain peaks, the bodies of everyone nearby, and even the fish in the sea. The commentary calls it hyperbole: the arrows reach both visible things and subtle ones.