கம்பராமாயணம் 7969 · யுத்த 17.198

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

திசைகள் எல்லாம் மறைந்தன - (அதிகாயன் செலுத்திய அம்புகளால்) திசைகள் எல்லாம் மறைந்தன; வானவர் மனமே போல - தேவர்களின் மனம் போல; மும்மைச் சுடரின் கொழுங் கதிர் குறைந்தன - மூன்று சுடர்களின் கொழுவி விளங்கிய ஒளி குறைந்தன; பகழி குவிந்து ஒன்று ஒன்றை அறைந்தன - அம்புகள் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன; வையம் அதிர்ந்தது - நிலவுலகம் அதிர்ந்தது; விண்ணும் அஃதே - ஆகாயமும் அவ்வாறே (அதிர்ந்தது); பொறியின் குப்பை நிறைந்தன - அனற் பொறிகள் மிகுதியாக நிறைந்தன; நெருப்புக் கற்றை நிமிர்ந்தன - நெருப்புக் கற்றை ஓங்கி வளர்ந்தன.

இப்பாடலில் அதிகாயனது அம்புகளால் ஏற்பட்ட நிலைகளைக் கவிஞர் விளக்குகிறார். மும்மைக் கொழுங்கதிர் - சூரியன், சந்திரன், அக்கினி என்றும் காருக பத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்றும் கொள்ளலாம். வானவர் மனமே போல - என்ற உவமை அதிகாயனின் வில்லாற்றல் கண்டு அவன் வெற்றி பெற்று விடுவானோ என அஞ்சித் தேய்ந்த வானவர் மனத்தைக் குறிக்கிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the quarters were hidden; like the hearts of the gods,
  2. the rich rays of the three lights grew dim; the arrows massed and struck
  3. one against another; the earth shook, and so did the sky;
  4. heaps of sparks filled everything, and sheaves of fire rose high.

What the poem says

Atikāyaṉ's arrows blot out every direction. The three great lights, the sun, the moon and fire (or, on another reading, the three sacred fires), grow faint, just as the gods' spirits sink for fear that he may win. Arrows collide in mid-air, earth and sky tremble, and showers of sparks and tongues of flame shoot up.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟaintaṉa ticaikaḷ ellām; vāṉavar maṉamē pōlak
kuṟaintaṉa, cuṭariṉ mummaik koḻuṅ katir; kuvintu oṉṟu oṉṟai
aṟaintaṉa, pakaḻi; vaiyam atirntatu; viṇṇum aḵtē;
niṟaintaṉa, poṟiyiṉ kuppai; nimirntaṉa neruppiṉ kaṟṟai.