கம்பராமாயணம் 797 · பால 12.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அந்தக் குமரன்) இவை மராமரம் என - மராமரம் என்னும்படி; வலிய தோளினான் - வன்மையான தோள்களையுடையவன்; அரா அணை அமலன் என்று - ஆதி சேடனாகிய படுக்கையில் பள்ளி கொள்ளும் திருமால்தான் அவதரித்தானோ என்று; அயிர்க்கும் ஆற்றலான் - ஐயுறக் கூடிய ஆற்றல் படைத்தவன்; பெயர் - (அவனுக்கு) அவனது பெயர்; இராமன் என்பது - இராமன் என்பது (அவன்); இளைய கோவொடும் - தம்பியான அரச குமாரனோடும்; பராவ அரு முனியொடும் - அளவிட்டுப் புகழ்வதற்கு அரிய முனிவனோடும்; பதி - (நம்) நகரை; வந்து எய்தினான் - வந்து சேர்ந்தான்.
தசரதன் மைந்தனான இராமன் தம்பியோடும் விசுவாமித்திரனுடனும் மிதிலை நகர்க்கு வந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With shoulders so strong you would say they were marā trees,
- with a might that makes one wonder whether he is the Pure One who rests on the serpent,
- Irāmaṉ is his name; together with the young prince
- and with the sage beyond all praise, he has come to our city.'
What the poem says
Nīlamālai continues. Tacarataṉ's son, she tells Cītai, has shoulders like the massive marā tree and such strength that people wonder whether he is Tirumāl himself, who rests on the serpent couch.
His name is Irāmaṉ, and he has come to Mithilā with his younger brother and with the great sage Vicuvāmittiraṉ.