கம்பராமாயணம் 7972 · யுத்த 17.201
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீரன் - இலக்குவன்; வாலி சேய் மேனி மேலும் - வாலிக்கு மகனாகிய அங்கதன் மேனி மேல்; கால் உயர் வரையின் - (சற்று) ஓங்கி உயர்ந்த அடிபரந்த மலையில்; செங்கேழ் அருவி போல் - சிவந்த நிறமுடைய அருவி போல; மழை பொரு குருதி வாரி ஒழுகக் கண்டான் - மழையை ஒத்த குருதி வெள்ளம் ஒழுகுவதைக் கண்டான்; கோல் ஒரு பத்து நூற்றால் - (உடனே அவன்) அம்புகள் ஓராயிரத்தால்; குதிரைகள் தலைகள் கொய்து - (தேரில் பூட்டப் பட்ட) குதிரைகளின் தலைகளை அறுத்து; மேலவன் சிரத்தைச் சிந்தி - (தேர் மேல் உள்ள) பாகனின் தலையைக் கொய்து; வில்லையும் துணித்தான் - (அந்த அதிகாயனுடைய) வில்லையும் துண்டித்து
வாரி - வெள்ளம், கால் உயர் வரை - சற்று ஓங்கி அடிப்பகுதி பரந்த மலை, குன்றெனினுமாம், கேழ் - நிறம். பத்து நூற்றால் - ஆயிரம், மேலவன் - தேர்ப்பாகன். பத்து நூறு - பண்புத்தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the body of Vālī's son, a flood of blood that rivalled the rain
- was streaming like a red waterfall down a tall, broad-based hill; the hero saw it;
- with ten hundred shafts he lopped off the heads of the horses,
- struck off the head of the one who sat above, and cut through the bow as well.
What the poem says
Ilakkuvaṉ sees blood pouring down Aṅkataṉ's body like a red waterfall cascading down a hillside. Roused, he shoots a thousand arrows: he beheads the horses of Atikāyaṉ's chariot and its driver, and cuts Atikāyaṉ's bow in two.