கம்பராமாயணம் 7973 · யுத்த 17.202

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாற்று ஒரு தடந்தேர் ஏறி, மாறு ஒரு சிலையும் வாங்கி,
ஏற்ற வல் அரக்கன் தன்மேல், எரிமுதற் கடவுள் என்பான்
ஆற்றல் சால் படையை விட்டான், ஆரியன்; அரக்கன் அம்மா,
வேற்றுள, ‘தாங்க! ‘என்னா, வெய்யவன் படையை விட்டான்.

பொருள் · Meaning in Tamil

மாற்று ஒரு தடந்தேர் ஏறி - வேறு ஒரு பெரிய தேரில் ஏறி; மாறு ஒரு சிலையும் வாங்கி - வேறாக ஒரு வில்லையும் கையில் எடுத்து கொண்டு; ஏற்றவல் அரக்கன் தன்மேல் - (தன்னை) எதிர்த்து வந்த வலிமை உள்ள அரக்கனாகிய (அதிகாயன்) மேல்; ஆரியன் - இலக்குவன்; எரிமுகக் கடவுள் என்பான் ஆற்றல் சால் படையை விட்டான் - தீக்கடவுள் என்பானது வலிமை மிகுந்த படைக்கலத்தைச் செலுத்தினான்; அரக்கன் - அதிகாயன்; தாங்க என்னா - (அதைத்) தடுக்க என்று கூறி; வேற்றுள வெய்யவன் படையை விட்டான் - வேறாகத் (தன்னிடம் உள்ள) தீக்கடவுளின் படையை விட்டான்.

இருவரும் தீக்கடவுளின் படையை விட்டனர் என்க. எரிமுகக் கடவுள் ஆற்றல் சால்படை வெய்யவன் படை என்பன அக்கினியாஸ்திரம் என்பர். சிலர் வெய்யவன் படையென்பதைக் கதிரவன் படை எனக் கொண்டு பொருள் கூறுவர். இது சூரியாஸ்திரம் எனப்படும். அவ்வாறாயின் இலக்குவன் தீக்கடவுளின் படையை விட அதிகாயன் கதிரவன் படையை அதற்கு எதிராக விட்டான் எனக் கொள்ள வேண்டும். மாற்று - வேறு. தன், அம்மா - அசைகள். தடந்தேர் - உரிச்சொல் தொடர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demon mounted another great chariot and took up another bow;
  2. against that strong demon who stood to oppose him, the noble one
  3. loosed the mighty weapon of the god whose face is fire; and the demon,
  4. crying 'Ward it off!', loosed the weapon of the Hot-rayed one, which he had besides.

What the poem says

Atikāyaṉ climbs into a fresh chariot and takes up another bow. Ilakkuvaṉ now uses a divine weapon, the missile of Agni, the fire god. Atikāyaṉ counters with a weapon of his own, which the commentary takes either as another fire weapon or as the weapon of the sun, the "hot-rayed one".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṟṟu oru taṭan tēr ēṟi, māṟu oru cilaiyum vāṅki,
ēṟṟa val arakkaṉtaṉmēl, eri mukak kaṭavuḷ eṉpāṉ
āṟṟal cāl paṭaiyai viṭṭāṉ, āriyaṉ; arakkaṉ ammā,
vēṟṟuḷa, ‘tāṅka! ‘eṉṉā, veyyavaṉ paṭaiyai viṭṭāṉ.