கம்பராமாயணம் 7974 · யுத்த 17.203

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொருபடை இரண்டும் - போரிடுகின்ற அந்த (எரியம்புகள்) இரண்டும் தங்களுக்குள் மோதின; பொருதலோடும் - அவ்வாறு போரிடுகையில்; இலக்குவன் துரந்த - இலக்குவன் எய்த; உருமின் வெய்ய - இடியினும் கொடுமை உடைய; எரிகணை - வெய்ய அம்புகள்; உலப்பு இலாத - (தடுத்து) அழிக்க இயலாதவையாய்; மார்பை உருவின - (அதிகாயனது) மார்பில் பட்டு ஊடுருவின; உளைகிலன் - (அதற்கு) வருந்தாதவனாகவும்; ஆற்றல் ஓயான் - (தன்) வலி குறையாதவனுமாகிய (அதிகாயன்); சொரிகணை - (இலக்குவன் துரந்த அம்புகளை விட); மும்மை - மூன்று மடங்கு அம்புகளை; தெழிக்கும் சொல்லான் - அதட்டுகின்ற சொற்களை உடையவனாய்; மழையின் சொரிந்தனன் - மேகம் போல் சொரிந்திட்டான்.

உரும் - இடி, பொருபடை எரிகணை - வினைத் தொகைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The two warring weapons fought each other; and as they fought,
  2. the fiery arrows Ilakkuvaṉ loosed, crueller than thunder,
  3. unending, pierced through his chest; yet he did not flinch, nor did his strength fail;
  4. with shouts of defiance he poured a rain of arrows three times as thick.

What the poem says

The two divine weapons collide in the air. At the same time Ilakkuvaṉ's own fiery arrows, fiercer than lightning, pierce Atikāyaṉ's chest. Yet the demon does not falter; still at full strength and shouting threats, he hurls back three times as many arrows as he has received.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poru paṭai iraṇṭum tammil porutaṉa; porutalōṭum,
eri kaṇai, urumiṉ veyya, ilakkuvaṉ turanta, mārpai
uruviṉa, ulappu ilāta; uḷaikilaṉ, āṟṟal ōyāṉ
cori kaṇai maḻaiyiṉ mummai corintaṉaṉ, teḻikkum collāṉ.