கம்பராமாயணம் 7976 · யுத்த 17.205

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோல் முகந்து - அம்புகளை எடுத்து, அள்ளி அள்ளி - அள்ளி அள்ளி; கொடுஞ்சிலை நாணில் கோத்து - வளைந்த வில்லின் நாணில் கோத்து; கால்முகம் குழைய வாங்கி - இரு நுனிக் கால்களும் சேருமாறு வளைத்து; சொரிகின்ற - (அதிகாயன் மேல்) செலுத்துகிற; காளை வீரன் பால் - காளை போன்ற வீரனாகிய இலக்குவன் பக்கத்தில்; முகம் தோன்ற நின்று - (நேரிடையாக) முகம் தோன்ற வந்து நின்று; காற்றினுக்கு அரசன் நம்ப - வாயுதேவன், விரும்பத்தக்க குணங்களை உடையவனே; பண்டை நான்முகன் படையால் - பழமையான பிரமனது படைக்கலத்தால்; அன்றிச் சாகிலன் என்றான் - அல்லாமல் இவன் சாக மாட்டான் என்றான்.

கால் - வில்கால், இருநுனி என்க. நம்பன் - விரும்பத்தக்க குணங்களை உடையோன். அள்ளி அள்ளி - அடுக்குத் தொடர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the young bull of a hero scooped up arrows by the handful,
  2. fitted them to the string of his curved bow, bent it till its tips met, and poured them forth,
  3. the King of the Winds appeared before him face to face and said,
  4. "He will not die, O worthy one, except by the ancient weapon of the Four-faced One."

What the poem says

As Ilakkuvaṉ goes on shooting handful after handful of arrows, the wind god Vāyu appears beside him and reveals the secret: Atikāyaṉ cannot be killed except by the weapon of Piramaṉ, the four-faced creator. This was the result of a boon the demon had received.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōl mukantu, aḷḷi aḷḷi, koṭuñ cilai nāṇil kōttu,
kālmukam kuḻaiya vāṅki, corikiṉṟa kāḷai vīraṉ
pāl mukam tōṉṟa niṉṟu, kāṟṟiṉukku aracaṉ, ‘paṇṭai
nāṉmukaṉ paṭaiyāl aṉṟic cākilaṉ nampa! ‘eṉṟāṉ.