கம்பராமாயணம் 7978 · யுத்த 17.207

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானோர் பூமழை பொழிந்து - தேவர்கள் மலர் மழை சிந்தி; எம்பொருமல் போயது என்றார் - எம்முடைய பெருவருத்தம் நீங்கி விட்டது என்றார்கள்; அரக்கர் - அரக்கர்கள்; தாம் அழைத்து அலறி - தாங்கள் ஒருவருக்கொருவர் பெயரிட்டு அழைத்து அலறிக் கொண்டும்; தள்ளி எங்கும் இரிந்தனர் - தள்ளிக்கொண்டும் எல்லா விடங்களிலும் தறிகெட்டு ஓடினார்கள்; குரக்குச் சேனை - குரங்குப் படை; தீமையும் தகைப்பும் நீங்கித் தெளிந்தது - (தனக்கு ஏற்பட்ட) தீங்கும், தடையும் நீங்கித் தெளிவு பெற்றது; கோமகன் - அரச மகனாகிய அங்கதனது; தோளின் நின்றும் - தோளில் இருந்து; கொற்ற வில்லான் - வெற்றி பொருந்திய வில்லாளியாகிய இலக்குவன்; குதித்தனன் - கீழே குதித்தான்.

பொருமல் - பெருந்துன்பம், இரிதல் - சிதறி ஓடல், தகைப்பு - தடை, கோமகன் - அரசமகனாகிய அங்கதன். அதிகாயன் வதைப் படலத்தில் அங்கதன் தோளில் ஏறி அவனை அழித்த இலக்குவன் நிகும்பலை யாகத்தை அழித்து இந்திர சித்தனை வெல்லும்போது அனுமனின் தோளில் ஏறிப் போர் செய்தான். பூமழை - உருவகம். குரக்கு - வலித்தல் விகாரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods rained flowers and said, "Our anguish is gone";
  2. the demons, calling to one another and wailing, pushed and fled in every direction;
  3. the monkey army, freed from harm and hindrance, grew calm;
  4. and from the prince's shoulders leapt down the hero of the victorious bow.

What the poem says

With Atikāyaṉ dead, the gods shower flowers and declare their distress ended. The surviving demons run in all directions, shoving one another and calling out each other's names. The monkey army, freed from danger, recovers its spirits, and Ilakkuvaṉ jumps down from Aṅkataṉ's shoulders.

The commentary notes that later, in the fight with Intiracittu, Ilakkuvaṉ will ride on Aṉumāṉ's shoulders instead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pū maḻai poḻintu, vāṉōr, ‘pōyatu em porumal ‘eṉṟār;
tām aḻaittu alaṟi eṅkum irintaṉar, arakkar taḷḷi;
tīmaiyum takaippum nīṅkit teḷintatu kurakkuc cēṉai
kōmakaṉ tōḷiṉniṉṟum kutittaṉaṉ, koṟṟa villāṉ.