கம்பராமாயணம் 7981 · யுத்த 17.210

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேரிடை நின்று, கண்கள் தீ உக, சீற்றம் பொங்க,
பாரிடைக் கிழியப் பாய்ந்து, பகலிடைப் பருதி என்பான்.
ஊரிடை நின்றான் என்ன, கேடகம் ஒருகை தோன்ற,
நீரிடை முகிலின் மின்போல் வாள் இடை நிமிர வந்தான்.

பொருள் · Meaning in Tamil

கண்கள் தீ உக - (நராந்தகன் தன்) கண்களில் இருந்து தீ வெளிப்பட; சீற்றம் பொங்க - சினம் மிகப் பொங்கி வர; தேரிடை நின்று - தேரில் இருந்து; பாரிடை கிழியப் பாய்ந்து - நிலவுலகு கிழியுமாறு பாய்ந்து; பகலிடைப் பரிதி என்பான் - பகலில் கதிரவன் என்பவன்; ஊரிடை நின்றான் என்ன - ஊர்கோளிடை நின்றுள்ளான் என்று சொல்லும்படி; கேடகம் ஒருகை தோன்ற - கேடயம் ஒரு கையில் விளங்க; நீருடை முகிலின் மின் போல் - நீருடைய கருமேகத்தின் இடையில் மின்னலைப் போல; வாளொடு நிமிர வந்தான் - வாளோடு நிமிர்ந்து வந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From his chariot, fire pouring from his eyes and rage boiling up,
  2. he leapt down so that the earth was torn; with a shield in one hand,
  3. looking as the sun by day would look standing within its halo,
  4. he came on, tall, with his sword like lightning in a rain-filled cloud.

What the poem says

Narāntakaṉ jumps down from his chariot with such force that the ground splits, his eyes spitting fire. With a round shield in one hand he looks like the sun encircled by a halo, and his sword flashes in his dark form like lightning in a rain cloud.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēriṭai niṉṟu, kaṇkaḷ tī uka, cīṟṟam poṅka,
pāriṭaik kiḻiyap pāyntu, pakaliṭaip paruti eṉpāṉ.
ūriṭai niṉṟāṉ eṉṉa, kēṭakam oru kai tōṉṟa,
nīriṭai mukiliṉ miṉpōl vāḷoṭu nimira vantāṉ.