கம்பராமாயணம் 7983 · யுத்த 17.212

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மரம் ஒன்று விரைவின் வாங்கி, வாய் மடித்து உருத்து, வள்ளல்
சரம் ஒன்றின் கடிது சென்று, தாக்கினான்; தாக்கினான் தன்
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனைத் தன் கை
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான்.

பொருள் · Meaning in Tamil

ஒன்று மரம் விரைவின் வாங்கி - ஒரு மரத்தை விரைவாக எடுத்து; வாய் மடித்து உருத்து - வாயை மடித்து சினந்து; வள்ளல் சரம் ஒன்றின் - வள்ளல் தன்மை உடைய இராமனுடைய அம்பு ஒன்று போல; கடிது சென்று தாக்கினான் - (அங்கதன்) விரைவாகச் சென்று (நராந்தகனைத்) தாக்கினான்; தாக்கினான் தன் - தன்னைத் தாக்கிய அவனுடைய; கரம் ஒன்றில் - கையொன்றில்; திரிவது - மரம் ஒன்று சுழல்வதை; ஆரும் காண்கிலாது - யாரும் காணமுடியாதபடி; அதனை - அம்மரத்தை; தன்கை - தன்கையில் உள்ள; அரம் ஒன்று - அரத்தினால் அராவிச் செய்த; வயிரவாளால் - உறுதியான (தன்) வாளால்; ஆயிரம் துண்டம் கண்டான் - ஆயிரம் துண்டுகளாக ஆக்கினான்.

வள்ளல் சரம் - இராமபாணம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Swiftly seizing a tree, biting his lip in fury,
  2. he went as fast as one of the generous lord's arrows and struck; but before anyone
  3. could even see the tree whirling in the striker's hand,
  4. the other, with the hard, file-sharpened sword in his hand, cut it into a thousand pieces.

What the poem says

Aṅkataṉ grabs a tree and, biting his lip in anger, rushes at Narāntakaṉ as swift as one of Irāmaṉ's arrows. But before anyone can even see the tree swinging in his hand, Narāntakaṉ's diamond-hard sword has cut it into a thousand pieces.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maram oṉṟu viraiviṉ vāṅki, vāy maṭittu uruttu, vaḷḷal
caram oṉṟiṉ kaṭitu ceṉṟu, tākkiṉāṉ; tākkiṉāṉtaṉ
karam oṉṟil tirivatu ārum kāṇkilātu ataṉait taṉkai
aram oṉṟu vayira vāḷāl āyiram tuṇṭam kaṇṭāṉ.