கம்பராமாயணம் 7986 · யுத்த 17.215
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கூர்மத்தின் - யாமையின்; வெரிநின் வைத்து - முதுகில் வைத்து; வானவர் அமுதம் கொண்ட - தேவர்கள் அமுதத்தைக் (கடைந்து) கொண்ட; நீர்மத்தின் - கடலில் நின்ற மத்தான மேரு மலையைக்காட்டிலும்; நிமிர்ந்த தோளான் - உயர்ந்த தோளினை உடையவனும்; உருமைத் தின்பான் - இடியைக் கூடத் தின்ன வல்லவனும் ஆன; போர் மத்தன் என்பான் - போர் மத்தன் என்ற பெயருடையவன்; நிறை மத்த மதுவைத் தேக்கி - நிறைந்த மயக்கத்தை உண்டாக்கவல்ல மதுவை மிக உண்டு; ஊர் மத்தம் உண்டாலன்ன மயக்கத்தான் - ஊமத்தம் காயை உண்டதைப் போன்ற மயக்கத்தவனாய்; புகர் மத்தப் பூட்கை மேலான் - புள்ளிகளை உடைய மத்தகத்தை உடைய யானையின் மேல் ஏறி; வந்தான்.
யுத்தோன்மத்தன் என்று மகோதரனுக்குப் பெயர் என்றும் அப்பெயரே போர் மத்தன் என்று வழங்கப்பட்டதாகத் தோன்றுகிறது என்றும் கூறுவர் வைமு.கோ. மகோதரனும், மகாபாரிசுவனும் இராவணனுக்குத் தம்பியர் முறை என்றும், மகோதரனுடைய யானை சுதரிசனம் எனப்படும் என்றும் அவர் குறித்துள்ளார். கூர்மம் - யாமை. வெரிந் - முதுகு, நீர் மத்து - மந்தரமலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With shoulders taller than the churning-stick set in the sea, placed
- on the Tortoise's back, by which the gods won the nectar, having drunk his fill
- of maddening liquor, dazed as if he had eaten the thorn apple, he who could eat thunder,
- the one called Pōrmattaṉ, came riding on a spotted, rutting elephant.
What the poem says
Another champion appears: Pōrmattaṉ, "the battle-mad". His shoulders are taller than Mount Mantaram, the mountain the gods set on the back of the divine Tortoise and used as a churning stick to win the nectar of immortality from the ocean. He can devour thunderbolts. Drunk on strong liquor until he seems poisoned by datura, he rides in on a spotted war elephant in rut.
The commentary identifies him with Mahodara, a kinsman of Irāvaṇaṉ.