கம்பராமாயணம் 7988 · யுத்த 17.217

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கவிகள் - குரங்குகள்; வேகமா வீசும் வெற்பினம் மேன்மேல் விழுவ - வேகமாக வீசுகின்ற மலைக்கூட்டங்கள் மேன்மேல் விழுபவை; பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா - பாகர்கள் முனை கொண்ட வில்லிலே வைத்துச் செலுத்துகிற களிமண் உருண்டைகள் ஆகும் என்று கூறுவதற்கும் கூடப் பொருந்தாது; மாகமா மரங்கள் எல்லாம் - மிகப் பெரிய மரங்கள் எல்லாம்; கடாத்திடை வண்டு சோப்பி ஆகினும் ஆம் - (கன்ன) மதத்தில் படியும் வண்டுகளை ஓட்டுதற்குரிய ஈயோட்டி ஆகினும் ஆகும்; அது அன்றேல் - பொருத்தமானது அன்று எனின்; கரும்பு என்றே அறையலாமால் - கரும்பு என்றே சொல்லலாம்.

எளிதில் முறிந்து அழிந்தமையால் மரங்களைக் கரும்பு என்றார். போர் மத்தனின் யானைக்கு மலை மண் உண்டை, மரம் கரும்பு என்க. உண்டை - மண்ணுருண்டை, வில்லுண்டை எனினும் ஆம். வண்டு சோப்பி - வண்டுகளை ஓட்டுதற்கு உரிய ஈயோட்டி. மலைகள் களிமண் உருண்டைகள் போலவும், மரங்கள் ஈயோட்டி போலவும், கரும்பு போலவும் அவ்வியானையின் மீது வீசப்பட்டுப் பயன்படாதொழிந்தமை கூறியது. எதிர்நிலை உவமை அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The hills the monkeys hurled with force, falling on it again and again,
  2. were not even worth calling the clay pellets its drivers shoot from their tipped bows;
  3. all the huge, sky-high trees could serve at most as fly-whisks to drive off
  4. the bees from its musth; or else one might simply call them sugarcane.

What the poem says

The monkeys bombard the elephant with hills and huge trees, but it does not notice. The hills are no more to it than the clay pellets its keepers flick at it with a pellet bow to steer it; the great trees are like fly-whisks for brushing the bees off its streaming temples, or like stalks of sugarcane for it to munch.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēkamāk kavikaḷ vīcum veṟpiṉam viḻuva, mēṉmēl,
pākar kāl cilaiyiṉ tūṇṭum uṇṭai ām eṉavum paṟṟā;
māka mā maraṅkaḷ ellām kaṭāttiṭai vaṇṭu cōppi
ākilum ām; atu aṉṟēl, karumpu eṉṟē aṟaiyalāmāl.