கம்பராமாயணம் 7989 · யுத்த 17.218
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குரக்குச் சேனை - குரங்குப் படை; காலிடைப்பட்டும் - (அந்த) யானையினது காலின் கீழ் அகப்பட்டும்; மானக் கையிடைப் பட்டும் - (அதன்) பெரிய துதிக்கையில் அகப்பட்டும்; கால வாலிடைப்பட்டும் - யமனைப் போன்ற வாலில் அடிபட்டு அகப்பட்டும்; வெய்ய மருப்பிடைப் பட்டும் - கொடிய தந்தங்களில் அகப்பட்டும்; நாலிடைப் பட்ட சேனை - நான்காக வகுக்கப்பட்ட (இராவணது) படை; நாயகன் தம்பி - தலைவனின் தம்பியாகிய இலக்குவன்; எய்த கோலிடைப் பட்டது எல்லாம் - எய்த அம்புகளினால் பட்ட பாட்டை எல்லாம்; பட்டது மாண்டு - பட்டு இறந்தது.
யானையால் குரங்குச் சேனை பட்ட பாட்டை எல்லாம் கூறியவாறு. இலக்குவன் இராவணனது நால்வகைப் படையைப் படுத்தியமை போல் போர் மத்தனுடைய யானை குரங்குப் படையைப் படுத்தியது என்றவாறு. மானம் - பெருமை, குரக்கு - வலித்தல் விகாரம், காலவால் - இரண்டன் தொகை, சொற்பொருள் பின்வரு நிலையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Caught under its feet, caught in its mighty trunk, caught
- by its tail like Death, caught on its cruel tusks, and dying,
- the monkey army suffered all that the fourfold army had suffered
- when caught by the arrows the Lord's brother shot.
What the poem says
Pōrmattaṉ's elephant wreaks havoc on the monkeys. They are trampled under its feet, seized in its trunk, lashed by its deadly tail and gored by its tusks. Everything the demons' fourfold army suffered from Ilakkuvaṉ's arrows, the monkey army now suffers from this one beast. The verb "be caught, suffer" is repeated through the verse.