கம்பராமாயணம் 7991 · யுத்த 17.220
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சேறலும் - முன் சொன்னபடி நீலன் வருதலும்; களிற்றின் மேலான் - யானையின் மேல் உள்ளவனாகிய; திண்திறல் அரக்கன் - மிக்க வலிமை உடைய அரக்கனாகிய போர் மத்தன்; செவ்வே - நேராக; ஆறு இரண்டு அம்பினால் - பன்னிரண்டு அம்புகளால்; அந்நெடு மரம் - (அவன் ஏந்தி வந்த) அந்த நீண்ட மராமரத்தை; அறுத்து வீழ்த்தான் - அறுத்து வீழ்த்தினான்; நீலன் - நீலன்; வேறு ஒரு குன்றம் வீசினான் - மற்றொரு குன்றை (எடுத்து) வீசினான்; அதனை - அக்குன்றத்தை; களிறு நூக்கி - தன் யானையை முன்னால் செலுத்தி; விண்ணில் - ஆகாயத்தில்; நூறு வெம்பகழி தன்னால் - நூறு கொடிய அம்புகளால்; நுறுக்கினான் - பொடியாக்கினான்.
செவ்வே - நேராக, நுறுக்குதல் - பொடி செய்தல், நூக்குதல் - செலுத்துதல், ஆறு இரண்டு - பண்புத்தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he came, the demon of firm strength upon the elephant
- with twice six arrows cut down that tall tree and felled it;
- Nīlaṉ hurled another, a hill; and that, in the sky,
- he smashed with a hundred cruel arrows, driving his elephant forward.
What the poem says
As Nīlaṉ advances, Pōrmattaṉ, mounted on his elephant, cuts his tree to pieces with twelve arrows. Nīlaṉ then throws a whole hill, but Pōrmattaṉ drives his elephant on and pulverises it in mid-air with a hundred arrows.