கம்பராமாயணம் 7992 · யுத்த 17.221
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பின் - அதற்குப் பின்பு; நெடுங்குன்றம் தேடிப் பெயர்குவான் - (மேலும்) பெரிய மலையைத் தேடிச் செல்கின்றவனாகிய (நீலன்); பெயரா வண்ணம் - செல்ல முடியாதபடி; அந்த நெடுங் கோபயானை - அந்தப் பெரிய சினம் மிக்க யானை; தடக்கை நீட்டி - (தன்) நீண்ட துதிக்கையை நீட்டி; பொன் நெடுங்குன்றம் சூழ்ந்த - பொன் போன்ற நீண்ட மந்தரமலையைச் சுற்றிய; பொறி வரி அரவம் போல - படப் பொறியும் உடல் கோடும் கொண்ட (வாசுகி என்னும்) பாம்பு போல; அமரரும் வெயர்ப்ப - (அதனைக் கண்ட) தேவர்களும் உடல் வியர்க்குமாறு; அங்கிதன் நெடு மகனை - தீக் கடவுள் மகனாகிய நீலனைப்; பற்றிப் பிடித்தது - பற்றிப் பிடித்தது.
மந்தர மலை - நீலன், அரவு - யானைத் துதிக்கை என்க. பெயர்குவன் - வினையால் அணையும் பெயர். பொன் நெடுங் குன்றம் - மந்தர மலை, பொறி வரி
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then, as he turned to go in search of another tall hill, so that he could not go,
- like the spotted, striped serpent that coiled round the tall golden mountain,
- that great raging elephant, while even the gods broke into a sweat,
- stretched out its huge trunk and seized the tall son of Aṅki.
What the poem says
Before Nīlaṉ can go looking for another hill, the furious elephant reaches out its trunk and grips him. The image recalls the churning of the ocean, when the great serpent Vāsuki, with spotted hood and striped body, was coiled around golden Mount Mantaram: Nīlaṉ is the mountain and the trunk is the snake. The watching gods sweat with fear for the son of Aṅki, the fire god.