கம்பராமாயணம் 7993 · யுத்த 17.222
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உரமும் - (பற்றிப் பிடித்த போது நீலன்) வலியையும்; ஆற்றல் ஊற்றமும் - வலிமையால் வந்த மன ஊக்கமும்; உயிரும் - உயிரும்; ஒடுங்கினன் என்ன - ஒடுங்கி விட்டான் என்று (பார்த்தவர் எண்ணும்படி); கொடும்படை - வளைந்த பூணணிந்த; வயிரக் கோட்டால் - தன் வலிமை உள்ள கொம்புகளால்; குத்துவான் - குத்துவதற்கு; குறிக்கும் காலை - (அவ்வரக்கனது யானை) எண்ணும் அளவில்; நெடுங்கையும் - (அவ்வியானையினுடைய) நீண்ட துதிக்கையையும்; தலையும் பிய்ய - தலையையும் பிய்த்துக் கொண்டு; நொய்தினின் - விரைவாக; நிமிர்ந்து போனான் - மேல் ஓங்கிச் சென்றான்; அரக்கர் நடுங்கினர் - (அச்செயல் கண்டு) அரக்கர்கள் நடுங்கினார்கள்; விண்ணவர் நன்று நன்று என்ன - தேவர்கள் நல்லது நல்லது என்று கூறி; நக்கார் - சிரித்தனர்.
ஆற்றல் ஊற்றம் - உடலாற்றலால் வந்த மன ஆற்றல். கொடும் - வளைந்த, படை - தந்தப்பூண். நன்று நன்று - அடுக்குத் தொடர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As all thought, "His strength, the vigour of his might and his life are spent,"
- and just as it took aim to gore him with its hard, curved, ringed tusks,
- he tore off its long trunk and its head and easily sprang up and away;
- the demons trembled; the gods laughed, saying, "Well done, well done!"
What the poem says
Everyone watching believes that Nīlaṉ, crushed in the elephant's trunk, has lost his strength and his life. But just as the beast lowers its banded tusks to gore him, he rips off its trunk and its head and leaps clear. The demons are terrified, and the gods laugh with delight and cry "Well done!"