கம்பராமாயணம் 7995 · யுத்த 17.224
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீலன் - நீலன்; வாங்கிய சிரத்தின் - (தான்) வீழ்த்திய (யானைத்) தலையில் உள்ள; மற்றை வயிரவான் கோட்டை - அந்த வயிரம் ஏறிய உறுதியான கொம்பை; வவ்வி - பிடுங்கி (பறித்து); வீங்கிய விசையின் - மிக்க வேகத்தோடு; அரக்கன் மேல் செல்ல விட்டான் - அரக்கனாகிய போர் மத்தன் மீது செல்லுமாறு செலுத்தினான்; அவன் - அந்தப் போர் மத்தன்; ஆங்கு - அப்பொழுது; அவற்றை ஆண்டு - அக்கொம்புகளை அவ்விடத்திலேயே; ஓர் அம்பினால் அறுத்து - ஓர் அம்பினால் துண்டாக்கி; ஓர் அம்பால் - ஓர் அம்பை; ஓங்கல் போல் புயத்தினான் தன் - மலை போன்ற தோளை உடையவனாகிய (அங்கதன்) தன்; உரத்திடை ஒளிக்க - மார்பில் பதிந்து மறையும்படி; எய்தான் - எய்தான்.
ஓங்கல் - மலை, உரம் - மார்பு, மற்றை - அசை. புயத்தினான் - வினையாலணையும் பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seizing the hard, great tusks from the head he had torn off,
- Nīlaṉ, with swelling force, sent them flying at the demon;
- there the other cut them down with one arrow, and with one arrow
- shot so that it sank out of sight in the chest of him whose shoulders were like mountains.
What the poem says
Nīlaṉ wrenches the diamond-hard tusks from the severed elephant head and hurls them at Pōrmattaṉ with tremendous force. The demon cuts them down with a single arrow, and with another drives a shaft so deep into the chest of the mountain-shouldered monkey hero that it disappears from view. The commentary names the wounded hero as Aṅkataṉ, though the fight described is Nīlaṉ's.