கம்பராமாயணம் 7999 · யுத்த 17.228

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாண்ட - இறந்த; மத மத்தமலையைப் பார்த்தும் - மதங் கொண்ட மத்தகத்தை உடைய யானையைப் பார்த்தும்; உன்மத்தன் - உன்மத்தனது; வயிர மார்பில் - வலிமையான மார்பில்; உரும் ஒத்தகரம் - (நீலனது) இடியை ஒத்த கை; சென்று உற்ற - சென்று பொருந்திய; வன்மத்தைக் கண்டும் - வலிமையின் (விளைவினைக்) கண்டும்; சன்மத்தின் தன்மையானும் - பிறவியின் (குணத்) தன்மையாலும்; தருமத்தைத் தள்ளி வாழ்ந்த கன்மத்தின் கடைக் கூட்டானும் - தருமத்தை விலக்கி வாழ்ந்த தீவினையால் ஏற்பட்ட முடிவாலும்; வயமத்தன் கடிது வந்தான் - வயமத்தன் விரைந்து (போர்க்களம்) வந்தான்.

வன்மம் - கறுவு கொண்ட வலிமை. சன்மம் - உடன் பிறந்த பண்பு. கன்மம் - வினைப்பயன், கடைக்கூட்டு - முடிவுக்காலம், இப்பாடலால் உன்மத்தன் என்பது போர் மத்தனின் வேறு ஒரு பெயர் என்று தெரிகிறது. 2/4 ஆம் பாடல் விளக்க உரை காண்க. மகா பாரிசுவனை மத்தன் என்னும் மத்தாதீகன் என்று முதல் நூல் கூறுவதாகச் சுட்டிக்காட்டி அவனையே கம்பர் வயமத்தன் என்று குறித்துள்ளார் என்று தோன்றுகிறது என்பர் வை. மு.கோ. மலை - உவமையாகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing the force with which the thunderbolt hand had struck Uṉmattaṉ's diamond-hard chest,
  2. and seeing the dead mountain of an elephant with its must-filled brow,
  3. driven by the nature he was born with, and by the final reckoning of deeds
  4. of a life lived pushing dharma aside, Vayamattaṉ came swiftly on.

What the poem says

Another demon champion, Vayamattaṉ, enters the fight. He has seen Nīlaṉ kill the demon called Uṉmattaṉ here, evidently another name for Pōrmattaṉ, and the dead elephant. Yet his inborn nature and the ripening of his evil deeds drive him forward to his own end.

The verse plays on the sound "-mattam/-mattaṉ" in every line (uṉmattaṉ, vaṉmattai, mattamalai, caṉmattiṉ, taruttai, kaṉmattiṉ, vayamattaṉ), a piece of verbal ornament. The commentary notes that Vayamattaṉ may be the poet's name for the demon called Mahāpārśva in the source epic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṉmattaṉ vayira mārpiṉ urum otta karam ceṉṟu uṟṟa
vaṉmattaik kaṇṭum, māṇṭa mata mattamalaiyaip pārttum,
caṉmattiṉ taṉmaiyāṉum, tarumattait taḷḷi vāḻnta
kaṉmattiṉ kaṭaik kūṭṭāṉum, vayamattaṉ kaṭitiṉ vantāṉ