கம்பராமாயணம் 8000 · யுத்த 17.229

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெய்கழல் அரக்கன் - அணிந்த வீரக் கழலை உடைய வயமத்தன்; பொய்யினும் பெரிய மெய்யான் - மாயம் (அல்) வஞ்சனையைக் காட்டிலும் பெரிய உடம்பினை உடையவன்; பொருப்பினைப் பழித்த தோளான் - மலையை எள்ளிய தோள்களை உடையவன்; வெய்யன் என்று உரைக்கச் சாலத் திண்ணியான் - கொடியவன் என்று உரைப்பதற்கு ஏற்ப மிக வலிமை உடையவன்; வில்லின் செல்வன் - வில்லாற்றலில் செல்வன் எனத் தக்கவன்; சேனை ஆர்த்து எழ - இராவணன் படைவீரர் மகிழ்ச்சியால் பேரொலி செய்து எழ; பிறங்கு பல்பேய் - விளங்குகிற பற்களை உடைய பேய்கள்; ஐ இருநூறு பூண்ட - ஆயிரம் பூட்டிய; ஆழி அம் தேரின் மேலான் - சக்கரத்தை உடைய அழகிய தேரின் மேல் ஏறியவன்.

பொய் - மாயம், வஞ்சனை, பொய்யினும் பெரிய மெய் - மாயத்தைக் காட்டிலும் பெரிய உடம்பு

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His body was greater even than falsehood; his shoulders put mountains to shame;
  2. so mighty that 'the cruel one' was a fitting name for him; a lord of the bow;
  3. that demon with warrior anklets, as his army rose roaring, stood upon
  4. a fine wheeled chariot yoked with a thousand ghouls with gleaming teeth.

What the poem says

A portrait of Vayamattaṉ as he goes into battle. "Greater than falsehood" is a pun: the Tamil words for falsehood and body (poy and mey, which also means truth) are set against each other, so his body is larger than all the illusion and trickery the demons are known for. His chariot is drawn by a thousand ghouls (literally "five times two hundred"), and his troops cheer as he comes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poyyiṉum periya meyyāṉ; poruppiṉaip paḻitta tōḷāṉ;
‘veyyaṉ ‘eṉṟu uraikkac cālat tiṇṇiyāṉ; villiṉ celvaṉ;
pey kaḻal arakkaṉ, cēṉai ārttu eḻa, piṟaṅku pal pēy
ai irunūṟu pūṇṭa āḻi am tēriṉ mēlāṉ