கம்பராமாயணம் 8001 · யுத்த 17.230

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆர்க்கின்றான் - (அந்த வயமத்தன்) பேரொலி செய்பவனாயும்; உலகை எல்லாம் அதிர்க்கின்றான் - உலக உயிர்களை எல்லாம் அதிரச் செய்பவனாயும்; உருமும் அஞ்சப் பார்க்கின்றான் - இடியும் அஞ்சுமாறு பார்ப்பவனாயும்; பொன்றினாரைப் பழிக்கின்றான் - (தனக்கு முன்) இறந்தவர்களின் (வலிமையைப்) பழிக்கின்றவனாயும்; பகழி மாரி தூர்க்கின்றான் - அம்பு மழையைப் (பொழிந்து போர்க்களத்தைத்) தூர்க்கின்றவனாயும்; குரங்குச் சேனை துரக்கின்றான் - குரங்குப்படையை ஓடச்செய்பவனாயும் (உள்ள); துணிபை நோக்கி - அவனது துணிவைப் பார்த்து; ஏற்கின்றார் இல்லை என்னா - (இவனைப்) போர் எதிர்ப்பவர் இல்லையே என்று எண்ணி; இடபன் வந்து - (வானரத் தலைவனாகிய) இடபன் என்பவன் வந்து; அவனோடு ஏற்றான் - அந்த வயமத்தனோடு போர் எதிர்த்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He roars; he makes the whole world shake; he glares so that thunder itself takes fright;
  2. he scorns those who fell before him; he fills the field with a rain of arrows;
  3. he drives the monkey army to flight. Seeing his daring,
  4. and thinking 'there is no one to face him', Iṭapaṉ came and took him on.

What the poem says

Vayamattaṉ rages across the field, sneering at the demons already killed as weaklings and scattering the monkeys with his arrows. The string of verbs, each line built from "he does this, he does that", gives a sense of his unstoppable rush. Iṭapaṉ, one of the monkey chiefs, sees that nobody else is standing up to him and steps forward to fight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārkkiṉṟāṉ, ulakai ellām atirkkiṉṟāṉ, urumum añcap
pārkkiṉṟāṉ, poṉṟiṉāraip paḻikkiṉṟāṉ, pakaḻi māri
tūrkkiṉṟāṉ, kuraṅkuc cēṉai turakkiṉṟāṉ, tuṇipai nōkki,
‘ēṟkiṉṟār illai ‘eṉṉā, iṭapaṉ vantu avaṉōṭu ēṟṟāṉ.