கம்பராமாயணம் 800 · பால 12.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கோ முனியுடன் - பெருமை மிக்க முனிவனுடன்; வரு கொண்டல் - வந்த மேகம் போன்றவன்; என்றபின் - என்று கூறிய பின்பு; தாமரைக் கண்ணினான் - தாமரைக் கண்ணனான திருமாலைப் போன்ற ஆற்றல் உடையவன்; என்ற தன்மையால் - என்று சொல்லிய வகையால்; ஆம் அவனே கொல் - (சீதை) அப்பொழுது (கன்னி மாடத்து அருகே) கண்ட அவனே போலும்; என்று ஐயம் நீங்கினாள் - என்று தான் கொண்ட சந்தேகம் (சிறிது) நீங்கப் பெற்றாள்; வாம மேகலையினுள் - அழகிய மேகலை அசைய; அல்குல் வளர்ந்தது - (அவளது) இடைப்பக்கம் பருத்தது.
தோழியின் வார்த்தையால் வில்லிறுத்தவன் தான்கண்ட ஆடவனே என்று துணிந்து மனத்திலிருந்த சந்தேகத்தைச் சிறிது நீக்கினாள் சீதை என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Once she had heard of 'a cloud who came with the great sage'
- and heard him described as one with lotus eyes,
- 'Yes, it must be he!' she thought, and her doubt left her;
- and beneath her lovely girdle her hips swelled.
What the poem says
Cītai's fear has been that the man who broke the bow might not be the one she saw from her window. Nīlamālai's description, a dark youth like a rain cloud, lotus-eyed, who came with the sage, convinces her that it is the same man.
Her relief and joy show in her body: she seems to bloom and fill out at once, the opposite of the wasting she suffered while she pined.