கம்பராமாயணம் 801 · பால 12.63

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இல்லையே நுசுப்பு என்பார் உண்டு உண்டு என்னவும்,
மெல் இயல் முலைகளும் விம்ம விம்முவாள்,
'சொல்லிய குறியின், அத் தோன்றலே அவன் !
அல்லனேல், இறப்பன்!' என்று, அகத்துள் உன்னினாள்.

பொருள் · Meaning in Tamil

நுசுப்பு இல்லையே - (இவளுக்கு) இடையானது இல்லவே இல்லை; என்பார் - என்று சொல்பவர் (உடல் பூரித்துள்ள இப்போது இடையும் தோன்ற); உண்டு உண்டு என்னவும் - (இடை) இருக்கின்றது இருக்கின்றது என்று சொல்லவும்; மெல்லியல் - சீதை; முலைகளும் விம்ம - தனங்களும் பருக்க; விம்முவாள் - (தானும்) உடல் பூரிப்பவளாய்; சொல்லிய குறியின் - (இவள்) சொன்ன அடையாளங்களால்; அவன் - வில்லை முறித்தவன்; அத்தோன்றலே - (நான் கன்னி மாடத்திலிருந்து கண்ட) அந்த ஆடவனேயாவான்; அல்லனேல் - (அப்படி) அவனாக இல்லாவிட்டால்; இறப்பென் - உயிரை விட்டொழிப்பேன்; என்று அகத்துள் - என்று மனத்திலே; உன்னினாள் - உறுதி கொண்டாள்.

என்னவும்: இசை நிறை; முலைகளும்; இறந்தது தழீஇய எச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that those who used to say 'she has no waist at all' now said 'there is one, there is one',
  2. she swelled with joy, and her soft breasts swelled as well;
  3. 'By the signs she has told, the man is that noble one!
  4. If he is not, I shall die,' she resolved within her heart.

What the poem says

Cītai's joy makes her whole body bloom, so that even her famously slender waist, which people said was not there at all, now seems to appear.

Still, she makes a private vow: by every sign her friend has given, the hero who broke the bow is the youth she saw and loves; but if it should turn out to be anyone else, she will die rather than marry him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1illaiyē nucuppu eṉpār uṇṭu uṇṭu eṉṉavum,
melliyal mulaikaḷum vimma vimmuvāḷ,
'colliya kuṟiyiṉ, at tōṉṟalē avaṉ!
allaṉēl, iṟappeṉ!' eṉṟu, akattuḷ uṉṉiṉāḷ.