கம்பராமாயணம் 8003 · யுத்த 17.232
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாய் கொண்டு - வாயைக் கொண்டு; சொற்றற்கு ஏற்ற - சொல்லுவதற்கு ஏற்புடைய; வலி கொண்டு - வலிமையைக் கொண்டு; பலி உண் வாழ்க்கை - பிறர் தரும் உணவை உண்டு வாழும் வாழ்க்கையை உடைய; பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே - பேய்களைக் கொண்டு வெற்றிபெற வந்த பித்தனே!; மிடுக்கைப் பேணி - (தன்) வலிமையைப் புகழ்ந்து; நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ - நோயை (உடலில்) கொண்டிருந்தும் (அதற்குத்) தேவையான மருந்தைச் செய்யமுடியாத ஒருவனே!; நின் நோன்மை எல்லாம் - உன் வலிமை எல்லாம்; ஓய்கின்றாய் - ஓயப் போகிறாய், காண்டி - (அதனைக்) காண்பாயாக; என்னா - என்று; இடபன் - இடபன் என்ற குரங்குத் தலைவன்; ஒல்கான் உரைத்தனன் - தளர்ச்சி அடையாதவனாய்க் கூறினான்.
பலி - பிறர்தரப் பெறும் உணவு, மிடுக்கு - வலிமை, பேணி - பெரிதென எண்ணி, நோன்மை - வலிமை, ஒல்குதல் - தளர்தல். பித்தன் என்று கூறுவது வெறும் வாய்ப் பேச்சாலும் தேரில் பூட்டிய பேய்களைக் கொண்டும் (228) வெல்ல வந்தவனை இகழ்ந்ததாம். நோய் கண்டு மருந்து செய்யா ஒருவ என்றது அரக்கரின் அழிவுக்குக் காரணம் இராவணன் சீதை மீது கொண்ட காதல் என்ற நோயைக் கண்டு அதற்குச் சீதையை விட்டிடுதலே மருந்து என உணராத ஒருவனே என்றபடி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With strength fit only for boasting with the mouth, you madman who came to win
- with ghouls that live on offerings! Cherishing your pride,
- you who carry a disease and will not take the cure! All your strength
- is about to give out — you will see!' So said Iṭapaṉ, unshaken.
What the poem says
Iṭapaṉ answers the taunt. He calls Vayamattaṉ a madman who hopes to win with nothing but big words and a team of ghouls that feed on others' offerings.
The image of the disease and the cure points at the whole demon cause. The sickness is Irāvaṇaṉ's desire for Cītai, which is destroying the demon race. The cure, giving Cītai back, is plain to see, yet the demons will not take it.