கம்பராமாயணம் 8005 · யுத்த 17.234
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அசும்புடைக் குருதி பாயும் ஆகத்தான் - ஊற்றுப் பெருக்கைப் போல் இரத்தம் (வெளியில்) கொட்டுகிற உடம்பை உடையவனாகிய (இடபன்); வேகத்தால் - விரைவோடு; அத் தசும்புடைக் கொடுந்தேர் தன்னை - அந்தக் கலசம் அமைந்த பெரிய தேர் தன்னை; தடக்கையால் எடுத்து வீச - தன் வலிய கையினால் எடுத்து வீசி எறிய; பசுங்கழல் கண்ண பேயும் - (அத்தேரில் பூட்டப்பட்டிருந்த) பசுமையான கழற்சிக் காய் போன்ற கண்களை உடைய (ஆயிரம்) பேய்களும்; பரவை நோக்கிப் பறந்தன - கடலை நோக்கிப் பறந்து சென்றன; விசும்பிடைச் செல்லும் காரின் தாரை போல் - (அத்தேரின் மேல் இருந்த வயமத்தன்) விண்ணில் செல்லும் மேக ஒழுங்கு போல்; நான்ற மெய்யான் - தொங்குகின்ற உடலை உடையவன் ஆனான்.
அசும்பு - ஊற்றுப் பெருக்கு, தசும்பு - மிடா. ஈண்டுத் தேர்க் கவசம் என்க. பசுங்கழல்கண் - பசிய கழற்சிக்காய் போலும் கண். பேயின் கண்களுக்குக் கழற்சிக்காயினை உவமை கூறுதல் மரபு. பரவை - கடல். கார் - மேகம், தாரை - ஒழுங்கு, நாலுதல் - (ஞாலுதல்) தொங்குதல். ஞாலம் என்ற பெயர் இதனால் வந்தது என்பர். நாணுட்டுச் செத்தான் என்ற பேச்சு வழக்கையும் எண்ணுக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His body pouring blood like a gushing spring, Iṭapaṉ in his speed
- seized that cruel chariot topped with its finial in his great hands and hurled it;
- the ghouls, with eyes like green bonduc nuts, flew off toward the sea;
- and the demon's body hung in the air like a train of clouds passing across the sky.
What the poem says
Although blood streams from his wounds, Iṭapaṉ grabs the demon's chariot and flings it away. The thousand ghouls harnessed to it go flying toward the ocean, and Vayamattaṉ, still on board, sails through the sky like a line of dark rain clouds.
Comparing a ghoul's eyes to green bonduc nuts (the round seeds of a thorny creeper) is a stock image in Tamil poetry.