கம்பராமாயணம் 8010 · யுத்த 17.239

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தண்டம் கையின் வீசிய - தண்டாயுதத்தைக் கையில் எடுத்துச் சுழற்றிய; தக்க அரக்கன் - (போர்த்தொழில்) தகுதியுள்ள அரக்கனாகிய கும்பன்; அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான் - அண்டங்கள் எல்லாம் வெடிக்கின்றன என்று கண்டோர் எண்ணும்படி பேரொலி எழச் (சுக்ரீவனை) அடித்தான்; அங்கு அதுகண்டு - அப்போது அந்தச் செயலைக்கண்டு; மாமரமே கொடு காத்தான் - (சுக்ரீவன்) பெரியமரத்தைக் கொண்டு (அடி தன் மீது விழாதபடி) காத்துக் கொண்டான்; அங்கு அது விண்டு தீர்ந்தது - அப்போது அப்பெரியமரம் துண்டாகி அழிந்தது; மன்னன் வெகுண்டான் - (அதைக்கண்டு) மன்னனாகிய சுக்ரீவன் சினம் கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The skilful demon, whirling the mace in his hand,
  2. struck so hard that the worlds seemed to burst apart;
  3. seeing it, the other warded off the blow with a great tree;
  4. the tree split and was gone; the king was enraged.

What the poem says

Kumpaṉ swings his mace at Cukkirīvaṉ with a crash like the universe splitting. Cukkirīvaṉ blocks with a big tree, but the tree is smashed to pieces. Now unarmed, the monkey king flares into anger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṇṭam kaiyiṉ vīciya takka arakkaṉ
aṇṭaṅkaḷ veṭippaṉa eṉṉa aṭittāṉ;
kaṇṭu aṅku atu mā maramē koṭu kāttāṉ;
viṇṭu aṅku atu tīrntatu; maṉṉaṉ vekuṇṭāṉ.