கம்பராமாயணம் 8011 · யுத்த 17.240

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ‘

பொருள் · Meaning in Tamil

பொறாதான் - மனம் பொறுக்காதவன் ஆகிய சுக்ரீவன்; இனி - இனி; பொன்றப் பொருவேன் என்று - (நீ) இறக்கும்படி போர் செய்வேன் என்று கூறி; ஒன்றப் புகுகின்றது - மும்முரமாய்ப் போரிடப் போகின்ற, ஓர் காலம் உணர்ந்தான் - ஒரு காலத்தை எண்ணியவனாய்; அப்பெரியோன் நின்று - அந்தப் பெருமை மிக்க சுக்ரீவன் நின்று; நினையாதமுன் - நினையாததற்கு முன்பே; நீலன் - நீலன்; குன்று ஒப்பது ஓர்தண்டு - குன்றினை ஒத்த ஒப்பற்ற தண்டாயுதம் ஒன்றினைக்; கொணர்ந்து கொடுத்தான் - கொண்டு வந்து கொடுத்தான்.

ஒன்றப்புகும் காலம் உணர்தல் - மாமரம் துண்டு பட்டமையால் இவனை எக்காலத்துத் தாக்குவது என்று நினைத்தல், நின்று நினையாதமுன் கருவி இன்மையால் எப்போர்க்கருவி கொண்டு தாக்குவது என நினைத்தல். இங்குக் காலமும் கருவியும் கூறியவாறு காண்க. நீலன் தண்டு கொடுத்தல் - இருவர் போரிடும் போது அடுத்தவர் இடைநுழைந்து போரிடுதல் இல்லை. ஆனால் அவர்களுக்குப் போர்க் கருவி கொடுத்து உதவுதல் உண்டு என்பது இதனால் தெரிகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Now I will fight until you die,' said he who could bear it no longer,
  2. and he weighed the moment to close in for the kill; but before
  3. that great one, standing there, could even think further, Nīlaṉ
  4. brought a mace as big as a hill and handed it to him.

What the poem says

Having lost his tree, Cukkirīvaṉ vows to fight to the death and wonders when, and with what weapon, to attack next. Before he has finished thinking, Nīlaṉ brings him a huge mace.

The commentary notes the code of war this shows. When two warriors are locked in single combat, no third fighter may join in, but it is right to hand one of them a weapon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘poṉṟap poruvēṉ, iṉi ‘ eṉṟu, poṟātāṉ,
oṉṟap pukukiṉṟatu or kālam uṇarntāṉ,
niṉṟu ap periyōṉ niṉaiyātamuṉ nīlaṉ
kuṉṟu oppatu ōr taṇṭu koṇarntu koṭuttāṉ.