கம்பராமாயணம் 8015 · யுத்த 17.244

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார்;
‘முடியார் இனி யார்? ‘என வானவர் மொய்த்தார்;
இடியோடு இடி கிட்டியது என்ன இரண்டும்
பொடி ஆயின தண்டு; பொருந்தினர் புக்கார்.

பொருள் · Meaning in Tamil

ஆயிர கோடியின் மேலும் - ஆயிரம் கோடிக்கு மேலாக; அடி அடித்தார் - (தண்டாயுதத்தால்) அடிகளை அடித்துக் கொண்டார்கள்; வானவர் - தேவர்கள்; முடிவு ஆனவன் யார் என - (இவ்விருவரில்) முடிவு காலம் வந்து நெருங்கியவர் யாவர் என (அறிய); மொய்த்தார் - நெருங்கிச் சூழ்ந்தார்கள்; இரண்டும் தண்டு - இரண்டு தண்டுகளும்; இடியோடு இடி கிட்டியது என்ன - இடியோடு இடி மோதியது எனும்படி (மோதி); பொடியாயின - துகள்களாயின; பொருந்தினர் புக்கார் -

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They struck blows beyond a thousand crores;
  2. the gods crowded close, asking 'Which one will meet his end?';
  3. as though thunder had struck thunder, both
  4. maces were ground to dust; then the two closed in and grappled.

What the poem says

Cukkirīvaṉ and Kumpaṉ trade countless blows with their maces, a crore being ten million. The gods gather overhead to see which of them is fated to die. When the two maces meet with a crack like colliding thunderbolts, both shatter to dust, and the fighters come to grips bare-handed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭi āyira kōṭiyiṉ mēlum aṭittār;
‘muṭivu āṉavaṉ yār? ‘eṉa vāṉavar moyttār;
iṭiyōṭu iṭi kiṭṭiyatu eṉṉa iraṇṭum
poṭiyāyiṉa taṇṭu; poruntiṉar pukkār.