கம்பராமாயணம் 8016 · யுத்த 17.245
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மத்தச்சினமால் களிறு என்ன மலைந்தார் - (சுக்ரீவன் கும்பன் ஆகிய இருவரும்) மதமும் சினமும் கொண்ட மயக்கமுள்ள களிறுகளைப் போல் போரிட்டார்கள்; பத்துத் திசையும் செவிடு எய்தின - (அதனால் ஏற்பட்ட ஓசையால்) பத்துத்திசைகளும் செவிடுபட்டன; பல்கால் தத்தித் தழுவி - பலமுறை பாய்ந்து தழுவி (நெருக்கியும்); திரள்தோள் கொடு தள்ளி - (தங்கள்) திரண்ட தோள்களைக் கொண்டு தள்ளியும்; குத்தி - (ஒருவரை ஒருவர்) குத்திக்கொண்டும்; தனிக்குத்துஎன - தனியாகக் குத்துவாய் என்று; மார்பு கொடுத்தார் - (அடுத்தவருக்கு) மார்பினைக் காட்டியவர்களாயும்; (போர் செய்தனர்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- They fought like great elephants in rut and fury;
- all ten directions were deafened; again and again
- they leapt and clinched, shoved with massive shoulders,
- punched, and bared their chests, daring 'Strike, blow for blow!'
What the poem says
The fight between Cukkirīvaṉ and Kumpaṉ turns into wrestling and boxing. The two are like maddened bull elephants, and the noise deafens the ten directions, that is, the eight points of the compass plus up and down. In a show of bravado each offers his chest to the other's fist.