கம்பராமாயணம் 8020 · யுத்த 17.249
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீலக் கிரி மேல் நிமிர் பொற்கிரி நேர்வான் - நீலமலையின் மேல் நிமிர்ந்து செல்லும் பொன்னால் ஆகிய மலை போல்பவனாகிய; ஆலத்தினும் வெய்யவன் அங்கதன் - நஞ்சினும் கொடுமை உடைய அங்கதன்; சூலப்படையானிடை வந்து தொடர்ந்தான் - சூலப்படையை ஏந்தியவனான (நிகும்பனை) வந்து தொடர்ந்து; அங்கு ஓர் - அப்பொழுது ஒரு; தாலம் படை கைக் கொடு - பனைமரம் ஆகிய படையைக் (கைக்) கொண்டு; சென்று தடுத்தான் - சென்று (அவனைத்) தடுத்தான்.
சூலப்படையான் - சூலப்படையை உடையவனாகிய நிகும்பன், ஆலம் - ஆலகால நஞ்சு, தாலப்படை - பனைமரம் ஆகிய படை, நீலக்கிரி - நீலமலை ஈண்டு நிகும்பன், பொற்கிரி - பொன் மலை ஈண்டு அங்கதன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who was fiercer than poison came and pressed hard on the trident-bearer;
- Aṅkataṉ there, taking a palm tree
- in his hand for a weapon, went and held him off,
- like a golden mountain rearing over a blue mountain.
What the poem says
Aṅkataṉ attacks Nikumpaṉ, who carries a trident, and uses a palm tree as his weapon to block him. He is called "fiercer than poison", meaning the deadly poison that rose from the churned ocean of milk in the myth. The closing picture sets the two side by side: the dark demon is a blue mountain and the golden monkey a mountain of gold rising above it.