கம்பராமாயணம் 8023 · யுத்த 17.252
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நின்றார்கள் - (இதுவரை) பின்னிடாது நின்ற (அரக்க வீரர்கள்); தடுப்பவர் இன்மை நெளிந்தார் - (குரங்குப்படைகளைத்) தடுத்திடும் (தலைவர்கள்) இல்லாமையால் தத்தளித்து; பின்றாதவர் பின்றி - புறங்கொடாதவர் புறங்கொடுத்து; இரிந்து பிரிந்தார் - நிலைகெட்டுப் பிரிந்தார்கள்; வன்தாள் மரம் வீசிய - வலிய அடிப்பகுதியைக் கொண்ட மரங்களை வீசிய; வானர வீரர் - குரக்கு வீரர்கள்; மிகுதானை கொன்றார் - (அரக்கரின்) பெரும் படையைக் கொன்றார்கள்; அரக்கர் குறைந்தார் - அதனால் அரக்க வீரர் எண்ணிக்கையில் குறைந்தார்கள்.
நெளிதல் - தத்தளித்தல், பின்றாதவர் - பின்னிடாதவர், இரிதல் - நிலைகெட்டு ஓடல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who had stood their ground wavered, having none left to hold the foe;
- those who had never retreated now retreated, broke and scattered;
- the monkey warriors, hurling trees with stout trunks,
- slaughtered the great host; and the demons dwindled away.
What the poem says
With Atikāyaṉ, Kumpaṉ, Nikumpaṉ and the other champions dead, the demon army loses its nerve. Soldiers who had never before given ground break and run. The monkeys, hurling whole trees, cut down the leaderless host until few demons remain.