கம்பராமாயணம் 8027 · யுத்த 17.256

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தங்களை - (தங்களுக்கு) அறிமுகமாகி இருப்பவர் தங்களை நோக்கி; ஐய - ஐயனே; இவ் அம்பைப் பறியும் என - இந்த அம்பை (உடலை விட்டுப்) பறித்து விடுங்கள் என்று சொல்ல; வந்து பறித்தலும் - (அவர்கள்) வந்து பறித்த உடனே; ஆவி பிறியும் அவர் எண் இலர் - உயிர் பிரிந்த அவர்கள் எண்ணிக்கை இல்லாதவர் ஆவர்; தம்மனை பெற்றார் - தங்கள் வீட்டைச் சென்று அடைந்தவர்கள்; குறியும் அறிகின்றிலர் - (அதன்) அடையாளத்தையும் அறியாதவர்களாய், சிந்தை குறைந்தார் - மனம் ஒடுங்கியவர்களும் (எண்ணிலர்) என்றபடி.

எண்ணிலர் என்பதை மத்திம தீபமாகக் கொண்டு, பிறியும் அவர் எண்ணிலர், சிந்தை குறைந்தார் எண்ணிலர் எனக் கூட்டுக. குறியும் அறியாமைக்குக் காரணம் அம்புகள் உடம்பில் பட்டதால் ஏற்பட்ட தளர்ச்சி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To those they knew they said, 'Sir, pull out
  2. this arrow!', and the moment these came and pulled it out, life
  3. left them, beyond number; and those who did reach their homes
  4. could not even recognise them, their minds were failing so.

What the poem says

Wounded demons beg friends to draw out the arrows lodged in them, and as soon as the arrows come out, they die. Those who make it home are so weakened that they do not recognise their own houses. The commentary notes that "beyond number" serves both halves of the verse, a figure in which one central word lights up what comes before and after it, like a lamp set in the middle of a room.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟiyummavartaṅkaḷai ‘aiya iv ampaip
paṟiyum ‘eṉa vantu paṟittalum āvi
piṟiyum avar eṇ ilar; tam maṉai peṟṟār
kuṟiyum aṟikiṉṟilar cintai kuṟaintār.