கம்பராமாயணம் 8034 · யுத்த 17.263
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அருவி நீர் வழங்கும் கண்ணான் - (கோக்குலக்குமரர் இறந்ததைக் கேள்விப்பட்டதால்) நீரருவி போன்று கண்ணீர் வெளிப்படுகின்ற கண்களை உடையவனாகிய இராவணன்; ஏங்கிய விம்மல் - ஏக்கம் கொள்ளக் காரணமாகிய; மானம் இரங்கிய இரக்கம் - மானமும் இரங்குகின்ற இரக்கமும்; ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை - மிக்க சினமும், துன்பமும் என்ற இவை, ஒன்றிற்கு ஒன்று - ஒன்றோடு ஒன்று; தாங்கிய தரங்கம் ஆக - மேலும் மேலும் தள்ளி வருகின்ற அலைபோல இருக்க; கரையினைத் தள்ளித் தள்ளி - (அவ்வலை) கரையளவு (வந்து) தள்ளித் தள்ளி; வாங்கிய - பின்னால் செல்லுகின்ற; கடல் போல் நின்றான் - கடல் போல் நின்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Pride that heaves with sobs, pity that grieves, valour,
- towering rage and sorrow: these, each pressing on the next,
- rose like waves that drive and drive against the shore
- and then draw back; so he stood, like the sea, his eyes pouring tears like a waterfall.
What the poem says
Irāvaṇaṉ hears that his sons and the princes of his house are dead. The poet pictures his mind as an ocean in which wounded pride, pity, warlike spirit, rage and grief roll in one after another like waves, breaking on the shore and pulling back. Meanwhile tears pour from his eyes like a waterfall.