கம்பராமாயணம் 8036 · யுத்த 17.265

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மண்ணினை எடுக்க எண்ணும்; வானினை இடிக்க எண்ணும்;
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும்;
‘பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் ‘என்று எண்ணும்; எண்ணிப்
புண்ணிடை எரிபுக் கென்ன, மானத்தால் புழுங்கு கின்றான்.

பொருள் · Meaning in Tamil

மண்ணினை எடுக்க எண்ணும் - (மேலும் இராவணன்) நிலவுலகை எடுக்க எண்ணுவான்; வானினை இடிக்க எண்ணும் - வானத்தை இடிக்க நினைப்பான்; எண்ணிய உயிர்கள் எல்லாம் - (உலகில்) எண்ணிக் கணக்கிடப்பட்டுள்ள உயிர்கள் அனைத்தையும்; ஒரு கணத்து எற்ற எண்ணும் - ஒருகண நேரத்தில் அழிக்க எண்ணுவான்; பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் - பெண் என்ற பெயரைக் கொண்ட பொருள்களை எல்லாம் பிளந்து அழிப்பேன்; என்று எண்ணும் - என்று நினைப்பான்; எண்ணி - அவ்வாறு நினைத்து; புண்ணிடை எரிபுக்கென்ன - புண்ணில் தீப் புகுந்தது போல; மானத்தால் புழுங்கி நையும் - மான உணர்வினால் (மனம்) புழுங்கி வருந்துவான்.

தனக்குத் துன்பம் வருகிற போது பெண்ணாசையை மறத்தலும் வெறுத்தலும் செய்யும் இராவணன் பிறகு அதை மறந்தவனாகிக் காமப் பித்துக் கொண்டு செயல்படுவதை எண்ணுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He thinks of lifting up the earth; he thinks of smashing the sky;
  2. he thinks of striking down in an instant every life that can be counted;
  3. he thinks, 'I will split apart everything that bears the name of woman'; and thinking so,
  4. like fire entering a wound, he smoulders and wastes away with wounded pride.

What the poem says

Irāvaṇaṉ's grief turns into wild fantasies of revenge on the whole universe. For a moment he even turns against everything called "woman", since a woman, Cītai, has brought this ruin. The commentary observes that in times of loss he hates his passion for women, but he soon forgets that and is driven by lust again. His wounded pride burns him like fire in a wound.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇṇiṉai eṭukka eṇṇum; vāṉiṉai iṭikka eṇṇum;
eṇṇiya uyirkaḷ ellām oru kaṇattu eṟṟa eṇṇum;
‘peṇ eṉum peyara ellām piḷappeṉ ‘eṉṟu eṇṇum; eṇṇip
puṇṇiṭai eri pukkeṉṉa, māṉattāl puḻuṅki naiyum.