கம்பராமாயணம் 8037 · யுத்த 17.266
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒருவரும் வாயால் உரையார் - (இராவணனைச் சூழ்ந்திருந்தவர்கள்) ஒருவரும் வாயால் எதுவும் பேசாமல்; உயிர்த்திலர் - மூச்சுக்கூட விடாதவர்களாய்; உள்ளம் ஓய்வார் - மனம் (தடுமாறி) ஓய்ந்து; வெரு வரும் தகையர் ஆகி - அஞ்சுகிற தன்மை உடையவர்களாகி; விம்மினர் இருந்த வேலை - அழுதவர்களாய் இருந்த பொழுது; தருவனம் அனைய தோளான் - மரங்கள் அடர்ந்த வனம் போன்ற தோள்களை உடைய இராவணன்; தன் எதிர் - தன் எதிரில்; தானிமாலி - தானிய மாலி (என்ற அவன் மனைவி); இரியலிட்டு - நிலைகெட்டு; அலறி - அலறிக் கொண்டு; ஓயாப் பூசலிட்டு - ஓயாத பேரொலி செய்து கொண்டு; ஏங்கி வந்தாள் - அழுது கொண்டு வந்தாள்.
வெருவரல் - அஞ்சுதல், இரியல் - நிலைகெட்டு ஓடல், பூசல் - பேரொலி. உரையார், உயிர்த்திலர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- No one spoke a word, none even breathed; as they sat there, hearts failing,
- stricken with dread and sobbing,
- before him whose shoulders were like a forest of trees, Tāṉiyamāli
- came rushing in disorder, shrieking, crying out without end, wailing.
What the poem says
The court sits frozen in silence and fear around the grieving king. Then Tāṉiyamāli, Irāvaṇaṉ's wife and the mother of Atikāyaṉ, bursts in screaming and sobbing. Irāvaṇaṉ's shoulders are compared to a dense forest because there are so many of them, twenty arms.